பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

309

தரையன் என்ற பெரும் பெயர்கள் வழங்கினான். சேரமான் கோதை இரவிவர்மன் அவன் மைத்துனன். தன் ஆட்சிப் பெருமையால் அவன் தான் சோழர் கீழ், சிற்றரசன் என்பதை மறந்து, திறைகொடுக்க மறுத்தான்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் கடுஞ் சீற்றத்துடன் பாண்டி நாட்டின் மீது படையெடுத்தான்.

மட்டியூர்ப் போர்:

கழிக்கோட்டைப் போர் 1202:

பாண்டியன் ஏழகப் படையும் மறப் படையும் இப்போர் களில் புறங்காட்டி ஓடின. பாண்டியனும் தன் இளவலுடன் நகரைவிட்டே ஓடி ஒளிந்து கொண்டான்.

சோழன் குலோத்துங்கன் III தன் முதற்கோபத்தில் நகரின் பல மண்டபங்களை அழித்தான். 'வழுதியர் தம் கூடமாடம் கழுதை ஏரிட உழுது புகழ்க் கதிர் விளையக் கவடி விதைத்தான்' என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அத்துடன் சோழன் சோழ பாண்டியன் என்ற பட்டம் சூட்டிக் கொண்டு, வீரமாமுடி புனைந்து வெற்றி விழா (விசயாபிடேகம்), வீரவிழா (வீராபிடேகம்) ஆற்றினான். பாண்டிய மண்டலத்துச் சோழ பாண்டிய மண்டலம் என்றும், மதுரைமா நகருக்கு முடித்தலை கோண்ட சோழபுரம் என்றும், மதுரைக் கொலு மண்டபத்துக்குச் சேர பாண்டியர் தம்பிரான் என்றும் பெயர் வழங்க வைத்தான்.

முப்பெருந் தமிழ் நாடுகளிலும் ஒப்பற்றவன் சோழனாகிய தானே என்ற தருக்குடன் மூன்றாம் குலோத்துங்கன் திரிபுவன வீரதேவன் (மூவுலக அரசன்) என்று பட்ட மேற்கொண்டான்.

வணங்கா முடியினராகிய பாண்டிய மரபினன் உள்ளத்தில் சோழப் பேரரசை வீழ்த்தும் துடுக்கையும், பாண்டியப் பேரரசு காணும் ஆர்வத்தையும் உண்டு பண்ணியவை இந்த அவமதிப்பும் வீறாப்பும் கலந்த பெயர் ஆரவாரங்களே என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அடுத்த தலைமுறையிலேயே பாண்டியர் மீது சோழர் சுமத்திய அனைத்தும் சோழர்மீது பாண்டியராலும் திருப்பி வட்டியுடன் சுமத்தப்பட்டன.