(310
|
அப்பாத்துரையம் – 16
ஹொய்சளர் வளர்ச்சி,- ஹாங்கல், குறுக்கோடு, குத்திவோலில், உத்தரா, சோரட்டூர், யெல்பர்காப் போர்கள்: 1190 -1191
சோழப் பேரரசைப் போலவே சாளுக்கியப் பேரரசும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தகர்ந்து வந்தது. அவர்கள் கீழிருந்தாண்ட தேவகிரி யாதவர்கள் அவர்களை விழுங்கி வளர்ந்தனர். சாளுக்கியப் பேரரசையே எதிர்க்கத் துணிந்த ஹொய்சளர் சாளுக்கியப் பேரரசின் தென் எல்லை கடந்து வந்தனர். ஹொய்சள இரண்டாம் வல்லாளன் ஹாங்கல் முதலிய போர்களங்களில் யாதவரையும் முறியடித்துத் தன் ஆட்சி யெல்லையை மாலப் பிரபை கிருஷ்ணை ஆறுகள் வரை பரப்பினான்.
புதிய பேரரசுப் போட்டி:
சோழ பாண்டியப் போராட்டம்: தஞ்சைப் போர்: 1219
சோழப் பேரரசர் மரபிலேயே மிகவும் வலிமை குன்றிய அரசன் மூன்றாம் இராசராசன். அவன் 1216-லே பட்டத்துக்கு வந்தான். அதே ஆண்டிலேயே புதிய பாண்டியப் பேரரசின் அடலேறு ஆன மாறவர்மன் சுந்தர பாண்டியன் 1 (1216 - 1238) அரசிருக்கை ஏறினான்.இவன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் II தம்பியே யாதலால், மூன்றாம் குலோத்துங்க சோழனால் அண்ணன் காலப் பாண்டிய அரசும், நாடும், மரபும் பட்டபாட்டைப் பார்த்துப் பார்த்துப் புழுங்கி யிருந்தான். இதனால் சோழப் பேரரசை வீழ்த்திப் பழிக்குப் பழி வாங்குவதே அவன் வாழ்வின் முதற் குறிக்கோள் ஆயிற்று.
தஞ்சைப் போர்
பாண்டியன் 1219-ல் சோணாட்டின் மீது படையெடுத்தான். தஞ்சையில் நடைபெற்ற போரில் இராசராசன் படைகள் அவன் வீரத்தாக்குதல்களுக்கு ஆற்றாது வெருண்டோடின.பாண்டியன்
வெற்றி வெளிகொண்டு தஞ்சையையும் உறையூரையும் எரியூட்டிப் பாழாக்கினான். எங்கும் மாடமாளிகைகள், கூடகோபுரங்கள் தவிடுபொடி யாக்கப்பட்டன. சோழன் மூன்றாம் இராசாதிராசன் ஓடி ஒளித்து கொண்டான்.