தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
(311
சோழரின் ஆயிரத்தனி அபிடேகமண்டபத்தில் சென்றிருந்து சுந்தர பாண்டியன் வீரமா முடிவிழா (வீராபிடேகம்) நிறை வேற்றினான். வெற்றி மகிழ்வுடன் தில்லை சென்று அம்பல வாணனுக்கு வழிபாடாற்றினான்.
இவ் வெற்றியின் பின் பாண்டியன் தற்போதைய புதுக் கோட்டைப் பகுதியிலுள்ள பொன்னமராவதி நகரில் சென்று வெற்றிக் கொலு வீற்றிருந்தான். அச்சமயம் சோழப் பேரரசர் மரபில் வந்த மூன்றாம் இராசராசன் மனைவி மக்களோடும் சென்று அவனைப் பணிந்து வேண்ட அவனும் சோழ நாட்டை அளித்தருளியதாகப் பாண்டியர் கல்வெட்டுக்களும் மெய்க்கீர்த்தி யும் கூறு கின்றன. 'சோணாடு கொண்டருளிய பாண்டிய தேவர்' எனவும் ‘சோணாடு வழங்கி யருளிய சந்தர பாண்டிய தேவர்' எனவும் அவன் விருதுப் பெயர்கள் மேற்கொண்டான்.
கடுஞ் சீற்றத்தை யடுத்துத் திடுமென வந்த இந்த அருட்பண்பு அரசியல் வெற்றி வீரருக்கு இயல்பே. ஏனெனில் அந்த பாண்டியன் அருட் பண்புக்கு உண்மையில் வேறொரு காரணம் இருந்தது. சோழப் பேரரசு படுவீழ்ச்சி யடைந்து பாண்டிய பேரரசு எல்லை மீறி வளர்வதை ஹொய்சளர் விரும்பவில்லை. அத்துடன் ஹொய்சளன் இரண்டாம் வல்லாளனின் புதல்வன் வீர நரசிம்மன் ஒரு சோழகுல இளவரசியை மணந்திருந்தான். இந்த இரண்டு உரிமையாலும் ஹொய்சளர் சோழருக்கு அவன் நாட்டைத் திருப்பித் தந்ததன் பின்னணிக் காரணம் இதுவே. ஆயினும் சோழர், பாண்டியப் பேரரசருக்கு அடங்கிக் கப்பம் கட்டும் நிலையை இவ்வாட்சியில் அடைந்தனர். அத்துடன் 'முடிகொண்ட சோழபுரம்' என்று இப்போது பெயர் தாங்கிய இடைக்காலச் சோழச் சிற்றரசர் தலைநகரான பழயாறையிலிருந்தே சோழன் இச்சமயம் ஆண்டு வந்தான்.
இம்முயற்சியில் சோழனுக்கு உதவிய ஹொய்சள வல்லாளனும், வீர நரசிம்மனும் தம்மைச் ‘சோழராஜ்ய பிரதிஷ்டாசாரியர்’ (பாண்டியனாகிய யானைக்குச் சிங்கம் போன்றவர்) என்றும் குறித்துக் கொள்கின்றனர்.