பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(312

||- -

அப்பாத்துரையம் - 16

பாண்டிய ஹொய்சளப் போட்டி: சோணாட்டு உள்கிளர்ச்சிகள்: உறத்திப் போர்: 1221

வட ஆர்க்காட்டுப் பகுதியிலுள்ள மகத நாடாண்ட சிற்றரசன் வாண கோவை கோவரையன் சோழருக் கெதிராகக் கிளர்ந்தெழுத்து தென் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். தென்னார்க்காட்டில் சேந்த மங்கலத்திலிருந்து ஆண்ட பல்லவர் குலக் குறுநில மன்னனான கோப்பெருஞ் சிங்கனும் அவனுடன் சேர்ந்து கொண்டான். சோணாட்டின் பெரும்பகுதி அவர்கள் கைப்பட்டது.

இக்கிளர்ச்சிகளுக்குப் பாண்டியன் ஆதரவும் ஊக்கமும் அளித்து வந்ததாகத் தெரிகிறது ஆனால், இந்நிகழ்ச்சி யறிந்த ஹொய்சள வீர நரசிம்மன் உடனே ஒரு பெரும் படையுடன் சோணாட்டின் மீது படையெடுத்தான்.

உறத்திப் போரில் வாணகோவரையனும் கோப்பெருஞ் சிங்கனும் முறியடிக்கப்பட்டனர். அவர்கள் ஆட்சிப் பகுதிகளில் வீரநரசிம்மன் கொள்ளையிட்டுப் பெரும் பொருளுடன் மீண்டான்.

சோழப் பாண்டியப் போராட்டம்: இரண்டாம் படையெழுச்சி: 1231

முதற்பாண்டியப் படையெடுப்பின் பின்பு ஆண்டுதோறும் பாண்டியனுக்குச் சோழன் திறைகொடுத்து வந்தான். பின்திறையை நிறுத்திப் போரிட்டுத் தன் உரிமைபெற எண்ணினான்.1231-ல் பாண்டியன் மீண்டும் சோழ நாட்டின் மீது படையெடுத்தான்.

இத்தடவை சோழப் படையின் அழிவும் குழப்பமும் முந்திய தடவையை விடப் பன்மடங்கு மிகுதியாயிற்று. உயிருடன் தப்பிப் பிழைப்பதே சோழனுக்கு அருமுயற்சியாய்ப் போய்விட்டது. அவன் மனைவியர் சிறைப்பட்டு அவதியுற்றனர்.

சோழர் தலைநகராகிய முடிகொண்ட சோழபுரத்தில் பாண்டியன் வெற்றி விழாவும் வீர விழாவும் முழக்கினான். 'சீ கோமாற வர்மன் திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டு முடி கொண்ட சோழபுரத்து வீராபிஷேகம்