தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
313
பண்ணியருளிய ஸ்ரீசுந்தர பாண்டிய தேவர்' என்ற நீண்ட விருதுப் பெயரை அவன் சூட்டிக் கொண்டான்.
பாண்டிய ஹொய்சளப் போட்டி: சோணாட்டு உட்கிளர்ச்சிகள்: தெள்ளாற்றுப் போர் II 1232: பெரம்பலுர்ப் போர் 1232 மகேந்திர மங்கலம் போர் 1232
பாண்டியர் இரண்டாம் படையெடுப்பில் தப்பியோடிய சோழன் மூன்றாம் இராசராசன் தன் பழைய எதிரிகளான சாளுக்கியர் உதவியையே கோருவசென்று வடக்கே சென்றான். ஆனால், அவன் அந்த நாடு போய்ச் சேரவில்லை.
தெள்ளாற்றுப் போர் II 1232
தனியாகக் குடும்பத்துடன் மறைந்தோடிய அவலையும் பரிவாரத்தையும், அவன் கீழ்ச் சிற்றரசனாயிருந்த கோப்பெருஞ் சிங்கன் என்ற பல்லவக் குடி மன்னன் தெள்ளாறு என்ற இடத்தில் போர் செய்து மடக்கினான் பேரரசன் என்று சிறிதும் மதியாமல் அவன் இராசராசனைச் சேந்தமங்கலத்திலுள்ள கோட்டையில் சிறைவைத்தான். இச்செயலை அவன் கல்வெட்டுக்கள் பெருமை யுடன் கூறுகின்றன.
தன்
தன் மைத்துனன் சிறைப்பட்டிருப்பது கேட்ட ஹொய்சள வீர நரசிம்மன் வெகுளியும் பதைபதைப்பும் கொண்டான். தானே சென்று வாணகோவரையனையும் அவன் சுற்றத்தினரையும் சிறைப் பிடித்தான். திருவரங்கத்துக்கு அருகிலுள்ள கோப்பெருஞ் சிங்கன் நாட்டை அழித்துச் சோழனை விடுவித்து வரும்படி அப்பண்ணன், சமுத்திர கொப்பையன் என்ற படைத்தலைவர் களை அனுப்பினான். அவர்கள் நாடு நகர்களை அழித்துக் கொண்டே முன்னேறிப் பெரம்பலூர்ப் போரில் கோப்பெருஞ் சிங்கனை முறியடித்தனர். அவர்கள் சேந்தமங்கலத்தை முற்றுகையிட்ட பின்னரே, கோப்பெருஞ்சிங்கன் சோழச் சக்கரவர்த்தியை விடுவித்தான்.
சோழப் பேரரசின் நலிவுற்ற சின்னமான இராசராசனை வீர நரசிம்மன் வரவேற்று ஆதரவு செய்தான். ஆனால், அவன் அத்துடன் நிற்கவில்லை. சோணாட்டையும் அவனுக்கு மீட்டுத் தரத் துணிந்தான்.