314
மகேந்திர மங்கலப் போர் : 1232
அப்பாத்துரையம் - 16
படைத்தலைவர்கள் சோழனை மீட்கச் சென்றிருந்த சமயத்தில் ஹொய்சள வீர நரசிம்மன் நேரே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான், மகேந்திர மங்கலப் போரில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கடுந்தோல்வி யடைந்தான். பேரரசனாகக் கிளர்ந் தெழுந்த அவன் இப்போரால் ஒருகணத்தில் தற்காலிக மாகச் சிற்றரசனாய் விட்டான். ஹொய்சளருக்குப் பணிந்து திறை தருவ தாகக் கூறித் தன்னைக் காத்துக் கொண்டான். அதேசமயம் அத்தறுவாயைப் பயன்படுத்திப் பாண்டியன் முன்பு சோணாட்டில் வென்று கொண்ட பகுதிகளை யெல்லாம் வீர நரசிம்மன் மீட்டு, சோழனிடமே தந்தான். கோப்பெருஞ்சிங்கனும் வாணகோ வரையனும் தற்காலிகமாகவேனும் அடக்கப்பட்ட தால், தன் மீந்த ஆட்சிக் காலத்திற்கு மூன்றாம் இராசராசன் பெயரளவில் பேரரசனாக வாழ முடிந்தது.
சோழப் பேரரசின் இறுதிச் சுடர் வீச்சு
மூன்றாம் இராசராசன் தன் ஆட்சி இறுதிக்குள் தன் ஏலாமையை உணர்ந்து கொண்டான், ஆகவே அவன் 1246-ல் தன் புதல்வன் மூன்றாம் இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி அவனிடமே பொறுப்பு ஒப்படைத்து விட்டு ஒதுங்கி வாழ்ந்தான். மூன்றாம் இராசேந்திரன் தந்தை ஏலாமை கண்டு புழுங்கியவன். பாண்டியர் மீது பழிவாங்கத் துடித்தவன். சோழ மரபின் வீரக் குருதி அவன் நாடிகளில் ஓடிற்று. அவன் ஒரு சில ஆண்டுகளுள் நினைத்ததைச் சாதிக்கும் பேறு பெற்றான். ஆனால், அவன் திடீர் வளர்ச்சி பாண்டிய எதிரியை மட்டுமன்றி, உறவினனான ஹொய்சௗன் பொறாமையையும் தூண்டிற்று.
பெரும் பாண்டியருள் ஒருவனான மாறவர்மன் சுந்தர பாண்டியன் I மகேந்திர மங்கலத் தோல்விக்குப் பின் 1238-ல் மாண்டான். சில மாதங்களே ஆண்ட சடையவர்மன் குலசேகரன் II பாண்டியனைத் தொடர்ந்துவந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் II ஹொய்சளர் கைப்பிள்ளையாகவே வாழ்ந்தான். ஆகவே மூன்றாம் இராசேந்திரன் திடுமெனப் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அவனைப் போரில் வென்று