(316
|- -
அப்பாத்துரையம் - 16
இச்செயலும் இவ்வாறு முந்திய செயலைத் தலை கீழாக்கிற்று. ஹொய்சளப் படைத்தலைவன் சிங்கணன் 1249-ல் சோணாடு முழுவதையும் படையெடுத்துச் சூறையாடினான். இரவி வர்மன் என்ற மற்றொரு படைத்தலைவன் கானாட்டை வென்று கைக்கொண்டான். உண்மையில் சோணாட்டின் ஒரு பகுதியை வீர சோமேசுவரனின் புதல்வனான வீரராமநாதன் வென்று, திருவரங்கத்துக் கருகிலுள்ள கண்ணனூரிலிருந்து ஆளத் தொடங்கினான். அடுத்த சில தலை முறைகளுக்கு அது ஹொய்சளரின் ஒரு தென்மாகாணமாயிற்று.
ஆனால், ஹொய்சளரின் இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் என்றும் ஒரு நிலையாய் இல்லை. அவர்கள் சில சமயம் பாண்டிய சம்ரட்சகர்களாகியும், சிலசமயம் சோழ சம்ரட்சகர்களாகியும் ஊசலாடி வந்தனர். சோழருக்கும், பாண்டியருக்கும் ஹொய்சௗன் இச்சமயம் மாமனாதலால், திடீர் திடீர் என்று இருதிசையில் 'மாமன் பாசம்' மாறி மாறி அல்லாடிற்று.
சோழப் பேரரசின் வீழ்ச்சியும் மறைவும் : பாண்டியர் பேரெழுச்சி: 1257
சடையவர்மன் சுந்தர பாண்டியன் I (1251-1270) காலத்தில் சோழர் ஆட்சி விழுந்து மறைந்து, ஹொய்சளர் ஆட்சி பெரிதளவு மங்கிற்று. பாண்டியப் பேரரசு இடைக்காலப் பாண்டியப் பேரரசை யும் சோழப் பெரும் பேரரசையும் கூடச் சில கூறுகளில் வென்று சீறு வாணம்போல் தமிழக வரலாற்றில் கண் கூசவைக்கும் ஒளியுடனும், விரை அதிர்ச்சியுடனும் பாய்ந்து உயர்ந்தது.
சடையவர்மன் சந்தரபாண்டியன் அவன் காலத்தில் தென் னாட்டிலேயே தலை சிறந்த வீரனா தலை சிறந்த வீரனாகவும் படைத்தலைவனாகவும் இருந்தான். அத்துடன் பாண்டிய மரபில் அவன் காலத்துக்கு முன்னும் பின்னும் இருந்து வந்த உள்நாட்டுப் போட்டி அவன் சூழலில் இல்லை. இந்நிலையில் அவன் ஆற்றல் தென்னா டெங்கும் சென்று பரவ முடிந்தது.
முடியேற்ற சில ஆண்டுகளில் அவன் தன் படை வலிமையைப் பெருக்கிக் கொண்டான்.1257-ல் அவன் சோழப் பேரரசின் மீது தண்டெடுத்துச் சென்று, சோழன் மூன்றாம் இராசேந்திரனைப்