தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
(317
போரில் முறியடித்துச் சோழ அரசைத் தனக்குக் கப்பம் கட்டும் சிற்றரசுகளுள் ஒன்றாக அடக்கினான். இப்போரில் ஹொய்சளரும் சோழனுக்கு ஆதரவாக நின்று போராடி யிருந்தனர். ஆனால், சோழர்களைப் போலவே அவர்களும் தோற்றோட வேண்டிய வந்தது.
மூன்றாம் இராசேந்திரன் இராசேந்திரன் 1279வரை ஆண்டான். அவனுக்குக் குழந்தை இல்லை.அவனுடன் சோழ மரபும் மறைந்தது. சோணாடு பாண்டியப் பேரரசின் ஒரு மாகாணமாகிவிட்டது.
பாண்டிய -ஹொய்சௗப் போராட்டம் : கண்ணனூர்ப் CLITIT 1264
ஹொய்சௗ சோமேசுவரன் தன் தோல்விக்குப் பின் ஆர அமரத் தன் முழு வலிமையையும் திரட்டிக் கொண்டு பாண்டியன் மீது படையெடுத்து வந்தான்.1264-ல் கண்ணனூர் அருகில் கடும் போராட்டம் நிகழ்ந்தது. இப்போர் கிட்டத் தட்டப் பேரரசாக வளர்ந்து வந்த ஹெராய்சளருக்கு ஒரு பேரிடியாயிற்று. அவர்கள் படைத்தலைவர்கள் பலர் கொலைப்பட்டனர்.படைகள் சிதைந்தன. பல களங் கண்ட அவர்கள் சிறந்த படைத் தலைவன் சிங்கணன் இப்போரிலேயே மாண்டான். ஹொய்சளரிடமிருந்து பாண்டியர் யானை குதிரைகளையும், நிதியங்களையும், படைக்கலங்களையும் களத்திலிருந்தே ஏராளமாகப் பெற்றனர். தவிரக் கண்ணனூரையும் தமிழகத்திலுள்ள தம் தென்மாகணத்தையும் ஹொய்சளர் இழந்தனர். அவற்றில் குவித்து வைத்திருந்த ஹொய்சளர் பெருஞ் செல்வக் குவையும் பாண்டியர் கைக்குட்பட்டது.
அடுத்துப் பாண்டியருடன் நிகழ்த்திய மற்றொரு போரில் ஹொய்சள மன்னன் சோமேசுவரனும் உயிர் நீத்தான்.
நண்ணுதல் பிறரால் எண்ணுதற்கரிய
கண்ணனூர்க் கொப்பத்தைக் கைக்கொண்டருளி
என்று அவன் மெய்க்கீர்த்தி இப்போரைச் சுட்டுகிறது.
பாண்டிய நாட்டு நெப்போலியன்: சடையவர்மன் சுந்தர பாண்டியன்1ன் கல்வெட்டுக்கள் கிருஷ்ணையாறு வரையிலுள்ள எல்லாநாடுகளிலும் காணப்படுகின்றன. காணப்படுகின்றன. அவன் ஆட்சி