(318
அப்பாத்துரையம் - 16
வரலாற்றின் முழுவிவரங்களும் இன்னும் விளக்கம் அடையா விட்டாலும் அவன் அந்நூற்றாண்டில் தென்னாட்டின் ஒரு நெப்போலியனாக விளங்கினான் என்பதில் ஐயமில்லை. சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழரையும் வென்று ஹொய்சளரையும் வெல்வதற்கு முன்பே மேல்கரையிலுள்ள கேரள அரசன் வீரரவி உதய மார்த்தாண்டவர்மனைத் தன்னடிப்படுத்தி மலைநாடு முழுவதிலும் சுற்றி வீர உலா ஆற்றியிருந்தான்.
இலங்கைப் படையெடுப்பு: 1255
சோழரை வென்றபின் மீண்டும் வடக்கே ஹொய்சளரை எதிர்க்குமுன், சுந்தர பாண்டியன் 1255-ல் தெற்கே இலங்கை சென்று, அங்கும் வீர உலா வந்தான். இலங்கையில் இச்சமயம் இரண்டு அரசர் இருந்தனர். ஒருவன் போரில் மாண்டான். மற்ற
லங்கை மன்னனைப் பணிய வைத்துப் பெருந் திரளான யானைகளும் தந்தங்களும் முத்துக் குவைகளும் திறையாகப் பெற்றான். கோண மலையிலும் திரிகூடமலையிலும் பாண்டியர் கயற்கொடி பொறிக்கப் பட்டது.
சேந்தமங்கல அழிவு: சோழருக்கும் ஹொய்சளருக்கும் பெருந் தொல்லை கொடுத்தவர்கள் கொங்கரும் மகதர் அல்லது வாணரும் பல்லவன் கோப்பெருஞ் சிங்கனுமே யாவர். தமிழகத் தில் சோழப் பேரரசர் ஆண்ட பகுதியும் ஹொய்சளர் ஆண்ட பகுதியும் இப்போது பாண்டியப் பேரரசின் ஆட்சிக்கு வந்து விட்டதால், அவர்களை அடக்குவது இப்போது அவன் இன்றி யமையாக் கடமையாய் விட்டது. ஆகவே அவன் முதலில் கொங் கரையும் மகதர் அல்லது வாணரையும் வென்றுவிட்டு, கோப் பெருஞ்சிங்கன் ஆண்ட பகுதிமீது படையெடுத்தான்.
கோப்பெருஞ்சிங்கன் அவனுக்குத் திறை செலுத்தித் தன் வலிமையைக் காத்துக் கொள்ள விரும்பினான். ஆனால், பாண்டியன் அவன் ஆற்றலடக்கியே அவனைத் தன்னடிப் படுத்துவதென்று துணிந்தான். பேரரசர்களும் அஞ்சும் ஆற்றல் படைத்த வல்லரச னாகிய அவனைப் பாண்டியன் பல போர்களில் வென்று அலைக் கழித்தான். இறுதியில் அவன் தலை நகராகிய சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டு