தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
321
ஆகியவர்கள் விரிவுரைகளால் இவனைப் பற்றியும், இவன் காலப் பாண்டி நாட்டு நிலைகள் பற்றியும் நாம் பல செய்திகளை விளக்கமாக அறிகிறோம்.
இப்பாண்டியன் தன் தம்பிமார் சிலருடன் ஆரியச் சக்கரவர்த்தி என்ற தம் தம் படைத்தலைவனுடனும் ஈழ நாட்டில் படையெடுத் தான். இலங்கைப் படைகள் காரிக்களப் போரிலும் மற்றும் பல போர்க்களங்களிலும் தோல்வியுற்றன. பாண்டியர் பல நகரங் களையும் கோட்டைகளையும் அழித்து விலையுயர்ந்த பொருள்கள் பலவற்றைக் கைப்பற்றிக் கொண்டு தம் நாட்டுக்கு மீண்டனர்.அவர்கள் கைப்பற்றிய மற்ற எல்லா பொருள்களையும் விட அவற்றுடன் சேர்த்துக் கொண்டு செல்லப்பட்ட புத்தர் பல் சின்னத்தையே இலங்கை மக்கள் பெருத்த இழப்பாகக் கருதி வருந்தினர். பாண்டியரை எதிர்த்துப் போரிட்டு அதை மீட்பது அரிது என்று கருதிய இலங்கை வேந்தன் மூன்றாம் பராக்கிரமபாகு 1304-ல் பாண்டியனிடம் பணிந்து வேண்டி அதைப் பெற்றுக் கொண்டதாக இலங்கை வரலாறு கூறுகிறது.
பாண்டியர் படை யெடுப்பின் போது மூன்றாம் பராக்கிரம
பாகு ளவரசனாகவே இருந்தான். அச்சமயம் இலங்கை மன்னாக இருந்தவன் முதலாம் புவனேகபாகு என்பவனே.
பாண்டியர் படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தியே யாழ்ப்பாணத்தில் இருந்து ஜெயவீர சிங்கை ஆரியன் என்ற பெயருடன் வட இலங்கையை ஆண்டான்.அவன் தன்னாலிலேயே இலங்கை முழுவதும் ஒரே ஆட்சியாக்கி, புத்தப் பற்சின்னத்தைப் பாண்டியன் அளித்த சமயம் உரிமையிழந்த இளவரசனுக்கு முழு ஈழ ஆட்சியையும் அளித்தான் என்று அறிகிறோம்.
பாண்டியப் பேரரசின் வீழ்ச்சி : இஸ்லாமிய வரலாற்றாசிரியர் கூற்று
மாறவர்மன் குலசேகர பாண்டியனுடன் பாண்டிய மரபு முடிவுறவில்லை. ஆனால், பாண்டியப் பேரரசு அவனுடன் முடிவுறு கிறது.
இஸ்லாமிய வரலாற்றாசிரியர் கூறுகிறபடி மாறவர்மன்