தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
323
குளங்கரைப் போர் முதலிய நிகழ்ச்சிகளுக்குப் பிற்பட்டு நடந்தது என்பதோ உண்மையாய் இருக்க முடியாது. ஏனெனில் மாலிக்கா பூர் படையெடுத்த ஆண்டு 1310. இரு பாண்டியரும் 1319 வரையும், சுந்தர பாண்டியன் 1342 வரையும் ஆண்டதாக அறிகிறோம். தவிர மாலிக்காபூர் பாண்டியர் உரிமையில் தலையிட்டதாகவே தெரிய வில்லை. வீரபாண்டியன் அச்சமயம் தான் ஆண்ட நகரமான வீர தவளப் பட்டணத்தை விட்டோடி விட்டான். அவன் பெரு நிதியமுழுதும் மாலிக்காபூர் கைப்பட்டது. சுந்தர பாண்டியனும் மதுரையைவிட்டு வெளியேறினாலும், அவன் உறவினரான பாண்டியர் ஒருங்கு சேர்ந்து மாலிக்காபூரை முறியடித்ததாகவும் அறிகிறோம்.
மாலிக்காபூர் படையெடுப்பு, கொள்ளையிட்ட செல்வக் குவை ஒன்றிலேயே வெற்றி கண்டது; அது அரசியல் துறையில் வெற்றிக காணவில்லை. கொள்ளைச் செல்வமும் வீர பாண்டிய னிடம் பெற்றவை தவிர மீந்தவையும் மன்னர் மக்கள் வாழ்வில் ஈடுபடுத்தாமல் கோயிலில் கொட்டிக் குவித்துவைத்தவை மட்டுமே. அது தென்னாட்டின் அரசர் சேமிப்பின் ஒரு பகுதியே என்பதை நோக்க அதன் அளவு நம்மை மலைக்க வைப்பதாய் இருக்கிறது. ஏனெனில் அதில் 612 யானைகள், 96000 மணங்கு
பான், 20,000 குதிரைகள், யானை குதிரைகள் மீது ஏற்றிச் செல்லப் பட்ட முத்து அணி மணிப் பெட்டிகள் பல்லாயிரம் ஆகியவை அடங்கியிருந்தன வென்று அக்கால வரலாற்றாசிரியர் குறித்துள்ளனர்.
திருவாங்கூர் நெப்போலியன் இரவிவர்மன் குலசேகரன்
சுந்தரபாண்டியன் முஸ்லிம் ஆதரவு கோரியிருக்கக் கூடு மானால், அது பெரிதும் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பிற்பட்ட வேறு ஏதேனும் படையெடுப்பாளரிடமே ஆதல் கூடும். ஆனால், அதில் பயன் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.1312 வரை சுந்தர பாண்டியன் மேலுரிமையை ஏற்றிருந்த திருவாங்கூர் அரசன் ரவிவர்மன் குலசேகரன் திடுமென வீர பாண்டி யனுடன் சேர்ந்து கொண்டு சுந்தர பாண்டியனை எதிர்க்கக் காண்கிறோம்.