பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

அப்பாத்துரையம் - 16

முறியடிக்கப்பட்ட பெண்கொலை புரிந்த நன்னனோ அல்லது அவன் முன்னோருள் ஒருவனோ சூரபன்மனாகவும் உருவகப் படுத்தப்பட்டிருக்கக் கூடும்.

கடவுளராகக் காட்சியளிக்கும் காவலர்

சோழர் தொடக்கக் கால மன்னர் மரபு, வரலாற்று மரபா அல்லது

முற்றிலும்

புராண மரபுதானா என்று ஐயுறத்தக்கதாகவே உள்ளது. அத்துடன் அவர்களில் சிலர் பெயரும் புகழும் அப்படியே இராமாயணத் தலைவன் இராமன் முன்னோர் சிலரின் பெயருடனும் புகழுடனும் முற்றிலும் ஒன்றுபடுகின்றன. இராமன் திருமாலாகக் கருதப்படுவதற்கு இதுவே வழி செய்திருக்கக் கூடும்.

புராண மரபுடன் மயங்கும் இந்தச் சோழர் குடி முதல்வர்கள் சிபி, முசுகுந்தன், காந்தமன், செம்பியன், மனு ஆகியவர்கள். இவர்களில் சிபி ஒரு புறாவைக் காப்பதற்காக அதைத் துரத்தி வந்த பருந்தினிடம் தன் தசையையே அரிந்து கொடுத்தான் என்று கூறப்படுகிறது. முசுகுந்தனோ அரக்கர்கள் பலரை வென்று இந்திரனையே காத்தவன் ! காந்தமன் தன் வாளால் குடகு மலையைப் பிளந்து காவிரியைச் சோழநாட்டில் ஓடச் செய்தவன் என்று குறிக்கப்படுகிறான். செம்பியன் அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றைத் தாக்கி அழித்து, உலகு காத்தவனாம்! மனுச் சோழன் ஆவின் கன்றின் மீது தேரை ஏற்றி விட்டதற்காக தன் மகனைத் தானும் தேர்க்காலில் இட்டு அரைத்து நீதியைநிலை நாட்டினான் என்று அறிகிறோம்.

தமிழில் எவ்வளவு பற்றார்வம் கொண்ட தமிழரும் இந்தக் கதைகளை வரலாறு என்று கூறவோ, நம்பவோ முன் வரமாட்டார்கள். ஆயினும், சிலப்பதிகாரமும் கலிங்கத்துப் பரணியும் மட்டுமன்றி, பல கல்வெட்டுகளும் புகழும் செயல்கள் இவை! இவற்றை முற்றிலும் கற்பனை, வரலாற்றை மெய்மை சிறிதும் அற்றவை என்று ஒதுக்கிவிடவும் முடியாது. மனிதனின் வீரச் செயல்கள், சிறந்த செயல்கள் இங்கே தெய்வச் செயல்களாகப் புனைந்துரைக்கப்பட்டு, அதன் மூலம் வரலாற்று மெய்ம்மைகள் உருத் தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவு.