பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

கனவேயாயினும் வியத்தகு கனவே!

21

இருபதாம் நூற்றாண்டில் தான் நம் காலத்தில் நாம் வானூ ர்திகளையும், பறக்கும் கோட்டைகளையும் பற்றிக் கண்டும் கேட்டும் வருகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் தம் நாளிலும் பழஞ் செய்திகளாக இவற்றைக் கூறும் போது, அவை தமிழன் கண்ட கனவுகளாய் இருந்தால் கூட வியத்தகு கனவுகளேயாகும் என்பதில் ஐயமில்லை. தமிழன் கனவில் கண்ட இந்த வாகனப் போர்க் காட்சி அவனது அரை வரலாறு, அரைப் புராணமரபில் திரிபுறமெரித்த விரிசடைக் கடவுளாகவும் காட்சி தருகின்றது.

இதிலும் விந்தையென்னவென்றால் கனவில் கூடத் தமிழ் அரசனோ, தமிழ்த் தெய்வமோ பறந்ததாகத் தமிழன் கற்பனை செய்யவில்லை. அந்த அரசன் எதிரிகளும் அந்தத் தெய்வத்தின் எதிரிகளும்தான் பறக்கும் கோட்டை அல்லது பறக்கும் நகரங்களை ஆண்டனர். வானகப்போரின் புகழை அவ்வரக்க எதிரிகளுக்கே தந்துவிட்டு, தன் அரசனுக்கும் தெய்வத்துக்கும் தமிழன் வெற்றிப் புகழைமட்டுமே தந்தான்! தமிழரசர், தமிழ்த் தெய்வம் பறக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ளாவிட்டாலும், அதைக் கற்றவரை அழிக்கக் கற்றுக் கொண்டிருந்தனர் போலும்!

வாழ்விலே கண்டதன்றிக் கனவிலே எதுவும் தோன்றுவ தில்லை என்பர். கண்டதைக் கனவுமிகைப்படுத்தலாம், திரிக்கலாம். ஆனால், குறைந்த அளவு கண்டதை அல்லது காண அவாவியதை அல்லது கண்டஞ்சியதைத்தான் அது உருவகப்படுத்தமுடியும். அப்படியானால் இக்கனவின் மூலம் தமிழர் பழமையில் வருங்கால ஆராய்ச்சி ஒருபடி முன்னேற வழி காணக்கூடும்

எனலாம்.

நாக மரபு

புராண மரபில் மறைந்து அல்லது மறைக்கப்பட்டுக் கிடக்கும் இன்னும் சில செய்திகளை இது நம் நினைவுக்குக் காண்டுவரக் கூடும். இந்தப் பறக்கும் கோட்டைகளுக்கு உரியவர் தமிழ் இனத்தவராலும் ஏனை இனத்தவராலும் நாகர்கள் என்று