பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம் - 16

குறிக்கப்பட்டவரே யாவர் என்று ஊகித்தல் தவறல்ல. தமிழர் பெரு நகரங்களைக் கட்டியவர்கள் என்று தமிழிலக்கியமும், பாண்டவர் தலைநகரைக் கட்டியவர்களென்று பாரதமும் புகழ்வது இவ்வினத்தவரையே. அவர்கள் தமிழகத்திலும் தென்னாட்டிலும் மட்டுமன்றி, இலங்கையிலும், வட இந்தியா விலும், கீழ்கடல் தீவுகளிலும் அன்று வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். நாகரிகத்தில் பிற்பட்டுக்கிடக்கும் நிலையில்கூட அசாமில் தம் இனத்துக்கெனத் தனி நாடு கோருமளவு அவர்கள் இன்றும் தனி வாழ்வும் தனிப் பண்பும் உடையவர்களாகவே உள்ளனர்.

ஆரியர்க்குச் சமஸ்கிருத எழுத்தை முதன் முதலில் ஆக்கித் தந்தவர்கள் என்றும், நாகரிகம் கற்பித்தவர்களென்றும் நாகர்களை ஆராய்ச்சியறிஞர் போற்றியுள்ளனர். உலகில் முதல் முதல் கடலுள் மூழ்கி முத்தெடுத்தவர்களென்றும், பாம்புகள் போலவும் எறும்புகள் போலவும் நிலத்தின் கரு அகழ்ந்து உலகில் முதன் முதலாகப்பொன் வெள்ளி முதலிய உலோகங்களைக் கண்டவர்கள் என்றும், அருங்கலை வேலைப்பாட்டில் சிறந்தவர்களென்றும் கருதப்படுபவர்கள் அவர்கள். இன்றுகூட இத்தொழில்களில் உலகெங்கும் இவ்வினத்தவரோ அல்லது அவர்களுடன் குருதிக் கலப்புடையவர் களோதான் திறம்பட ஈடுபட்டு உழைக்கின்றனர் என்றும் கேள்விப்படுகிறோம்.

உலகெங்கும் பாம்பு வழிபாட்டைப் பரப்பியவர்களும் இந்த நாகர்கள் என்றே கருதப்படுகிறது. இது அவர்கள் முற்காலப் பொதுப்பரப்புக்கு மட்டுமன்றி, மலையாள நாட்டில் சிறப்பாகப் பரவிய செறிவுக்கும் சான்று ஆகும். பாம்புக்காட்டு நம்பூதிரிகள் என்று கூறப்படும் மலையாள பிராமணர்கள் உண்மையில் பண்டை நாகரின் பெருங்குடி மரபினரேயாவர்.

புத்தர் பிறந்த சாக்கியர் குடி நாகமரபு சார்ந்ததென்று அவர் பிறப்பிடத்தின் அகழ்வாராய்ச்சி ஏடுகள் கூறுகின்றன.புத்தமதம் வங்கத்திலும், தென்னாட்டிலும், இலங்கையிலும், பர்மா சீனாவிலும் விரைந்து பரவியதற்கு இவ்விடங்களில் உள்ள மக்கள்