பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

23

பெரும் பகுதியினர் நாக மரபினராக இருந்ததே தலையான காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நாகர்கள் யார்? எந்த இனத்துடன் நெருங்கிய தொடர் புடையவர்கள்? இவர்கள் பண்டைப் பெருவாழ்வு அழிந்து உலகெங்கும் இன்று சிறுமையுற்று நலிவானேன்?

ன்னும் ஆராய்ச்சியுலகம் தெளிவாக வரையறுக்க முடியாத கேள்விகள் இவை! ஆயினும், ஆராய்ச்சிக்கு இங்கே கொடி காட்டல் முடியாததன்று.

நாகர்களுக்கென்று இன்று தனி மொழி எதுவும் இருப்ப தாகத் தெரியவில்லை. அவர்கள் சில இடங்களில் திராவிட மொழிகளையும், சில இடங்களில் வேற்றின மொழிகளையும் பேசுகின்றனர். ஆனால், எங்கும் அவர்கள் நாகரிகம் ஒன்றே! எங்கும் அவர்கள் தம்மை நாகர்கள் என்றே கூறிக் கொள்கின்றனர். பாம்பு என்ற பொருளில் இப்பெயர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் பொதுவான பெயரேயாகும். ஆனால், நாகமரபினரின் கிளையினத்தவரான வில்லியர் முதலிய பெயர்கள் தென்னாட்டிலும் வட இந்தியாவிலும் ஒருங்கே 'வில்' என்ற தமிழ்ச் சொல்லடிப்படையான தமிழ்ப் பெயராகவே காணப்படுகின்றன.

நாகர் தமிழினத்தவரே!

நாகர்கள் உண்மையில் தமிழகத்தில் நாற்புறமும் செந்தமிழ் அல்லது திருந்திய தமிழ் பரவாத இடங்களில் உள்ள தமிழினத் தவர்களே. செந்தமிழ் பரவாத இடத்திலேயே ஆரியமுதலிய பிற

னத்தாக்குதல்கள் எளிதாகத் தமிழினத்துடன் கலக்கவும் முடியவில்லை. முதன் முதலில் நிகழ்ந்ததனால், அவர்கள் தமிழகத்துக்கு வேலியாய், அயலவர்க்கு எளிதாக இரையாயினர். இக்காரணத்தால் அவர்கள் மதிப்பில் குறைந்து அடிமைப் பட்டனரேயன்றி, பண்பாட்டில் எளிதில் மாறவில்லை. தமிழகம் சூழ்ந்த திராவிட இனத்தவர்கள் மட்டுமன்றி, சிங்களர், வங்காளர், பர்மியர், மலாய் மக்கள், திபெத்தியர், நேபாள காசுமீர மக்கள் ஆகிய பலரும் இந்நாக மரபினரேயாவர். இந்தியா முழுவதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள், கோயில் குருக்களாகவும், மருத்துவ,