பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அப்பாத்துரையம் - 16

மந்திர, சோதிட வாணர்களாகவும் உள்ள வகுப்பினர் நாகர்களே என்றே கருத இடமுண்டு.

வருங்கால ஆராய்ச்சிகள் இவற்றைத் தெளிவுபடுத்த

வேண்டும்.

மனித இனத்திடையே மனித இனத்தவரான இந்த நாகரைப் பண்டைத் தமிழர்கூடத் தெளிவாய் அறியாமல், இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியும் தெளிய முடியாமல் மறைத்ததற்கும், மறைப்பதற்கும் புராண மரபுகளும், அவற்றைப் பின்பற்றிய தமிழ், சமஸ்கிருத இலக்கிய மரபுகளுமே யாகும்.

ஓரிடத்தில் இம்மரபுகள், நாகர் வாழ்வகம் தேவர் உலகம் என்கின்றன; ஓரிடத்தில் நிலவுலகுக்கு அடியில் உள்ள ஒரு கீழுலகம் என்று காட்டுகின்றன. ஒரு சில சமயங்களில் மணிமேகலை போன்ற ஏடுகள் தம்மையறியாமல் புராண மரபை மறந்து அதை மனித உலகமாகக் கூறிவிடுகின்றன. கிள்ளிவளவன் நாக அரசனான வலைவணன் மகளாகிய பீலிவளையை மணந்து தொண்டைமானை ஈன்றதாக மணிமேகலை மூலம் கேள்விப் படுகிறோம்.

நாகர்கள் மனித உருவினர் என்று சில சமயமும் பாதிமனிதர், பாதி பாம்புருவங்களென்று சில சமயமும் புராண மரபில் குறிக்கப் பெறுகிறார்கள். நாகரிகமுடையவர்களென்று சில சமயமும், ஆடையற்ற, மனிதரைத் தின்கின்ற காட்டு மிராண்டிகள், அரக்கர்கள் என்று வேறு சில இடங்களிலும் அவர்கள் வருணிக்கப்படுகிறார்கள்.

திருந்திய தமிழ் அல்லது செந்தமிழ் பரவிய இடமெல்லாம் திருந்திய ஆரியம் அல்லது சமஸ்கிருதமும் பரவிற்று. பண்டைத் தமிழர் நாடகக் கலையும், இசைக்கலையும் முதன் முதல் செந்தமிழ் நிலத்திலே அழிவுற்று, பின் சமஸ்கிருதத்தில் பரவி அங்கே உயிர்ப்பும் வளர்ச்சியுமற்று நலிந்ததைக் காண்கிறோம். அது போலவே செந்தமிழ் பரவிய இடமெல்லாம் நிலவிய நாகர் அல்லது பழந்தமிழினத்தவர் விஞ்ஞான அறிவும் அழிவுற்று, சிலகாலம் சமஸ்கிருதத்தில் தலைகாட்டி ஓய்ந்தது. ஆனால், நாகர் வாழ்விழந்த போதும் தொழில் துறையுள் அதை நீண்ட நாள்