பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

27

களுடனும் கதை யுறுப்பினர்களுடனுமே தொடர்பு கொண்டு ஒரு சில மிகப் பழமை வாய்ந்த பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் (சிறப்பாகப் புறநானூற்றில்) நமக்குக் கிட்டியுள்ளன. அவற்றுள் ஒன்று பெருஞ்சோற்றுதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் பாடியது ஆகும்.

"அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

(புறம்2)

என்று அப்புலவர் அரசனை நேராக விளித்துப் பாடுகிறார். ‘அலைந்தாடுகின்ற பிடரி மயிருடைய குதிரைகளை உரிமையாகக் கொண்ட ஐவருடன் (பாண்டவருடன் சினங்கொண்டெழுந்து, அவரிடமிருந்து நாட்டைக் கைக்கொண்டு, பொன்னாலான அழகிய தும்பை மலர் சூடிப் போர்க்கெழுந்த நூற்றுவரும் (கௌரவரும்) போரிட்டுப் போர்க்களத்திலே அழிவுற்ற சமயத்தில், இருசார்பினருக்கும் பெருவிருந்து கொடுத்த அரசனே!' என்பது இதன் பொருள்.

பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்ததனை ஓட்டியே இச்சேரப் பேரரசன் பெருஞ்சோற்றுதியன் என்றழைக்கப்

பட்டான்.

இப்பாடல், பாரதக்கதையின் வாய்மைக்கே ஓர் அகச் சான்று என்று கூறத்தக்கதாய் உள்ளது. ஏனெனில், மன்னன் உதியன் சேரலாதன் பாரதப்போர் நடந்தபோது போர்க்களத்தில் பாண்டவருடனிருந்தவன். புலவர் அவனை நேரில் சென்று பாடியதனால் அவரும் அரசரும் பாரதப் போர் நிகழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவராவர்.

பாரதப் போரைக் குறிக்காமல் அதன் முக்கிய உறுப்பினருள் ஒருவரும், பாண்டவர் ஐவருள் முதல்வருமான தரும புத்திரனைச் சோதமனார் என்ற புலவர் பாடியதாக மற்றொரு பாட்டு (புறம் 366) உளது. இதில் புலவர் தரும புத்திரனை ‘அறவோர் மகனே,