28
அப்பாத்துரையம் - 16
மறவோர் செம்மால்!' என்று விளித்து, 'அறமும் பொருளும் இன்பமும் பெருக்கி நிலையான வீடு பேறு காண்பாயாக!' என்று வாழ்த்துகிறார். பாரதப் போர்க் காலத்தவராகக் கருதப்படும் மற்றொரு புலவர் மார்க்கண்டேயனார். நிலையாமை பற்றிய அவர் அழகிய பாட்டொன்று புறநானூற்றில் (362)காணப்படுகிறது. அத்துடன் யாப்பருங்கல விருத்தியுரையில் அவரால் பாடப் பட்டதாகத் தெரியவரும் மார்க்கண்டேயனார் காஞ்சியிலிருந்து ஓர் விழுமியபாடலும் ‘தோல்' என்பதற்கு எடுத்துக் காட்டாகக் குறிக்கப்படுகிறது.
பாரதப் போரையும் பெருஞ் சோற்றுதியனையும் தம் காலச் செய்தியாகவே முரஞ்சியூர் முடிநாகராயர் குறிக்கிறார். அதே செய்தியைப் பழங்காலச் செய்தியாகக் குறிப்பவர் மாமூலனார் (அகம் 233). சிலப்பதிகாரமும்
'ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன் றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன்’
(29-ஆவது வாழ்த்துக் காதை)
என்று இதே நிகழ்ச்சியைப் பழங்காலச் செய்தியாகக்குறிக்கிறது.
ய
பாரதத்துடன் தொடர்புடைய இப்பாடல்களைப் போலவே, இராமாயணத்துடன் சமகாலத் தொடர்புடையதாகத் தோற்றும் மற்றொரு பாடலும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. இது பொதுவாக நிலையாமை பற்றி வான்மீகியார் என்ற புலவர் பாடிய பாட்டே (புறம் 358). இப்பெயர் சமஸ்கிருதத்தில் இராமாயணம் இயற்றிய வால்மீகியையோ இரமாயணத்திலேயே கதை யுறுப்பினராகக் காணப்படும் வான்மீகியையோ நினைவூட்டுவது ஆகும்.
ஆராய்ச்சிப் போக்குகள்
பாரதம் இராமாயணம் ஆகிய இதிகாசங்களை வரலாற்று நிகழ்ச்சிகளாகக் கொள்பவருள்ளும் பலருக்கு இப்பாடல்கள் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் தந்துள்ளன. அவற்றைக்