தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
29
கற்பனைக் கதையென்று கருதுபவர்களிலும் பலருக்கு இது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் தரத்தவறவில்லை. ஏனென்றால் அவ்விரு சாராருமே இக்கதைகளைச் சமஸ்கிருதத்திற்கும் ஆரிய நாகரிகத்துக்குமே உரியன என்று எளிதாக முடிவுகட்டி வைத்துள்ளனர். இதற்கு மாறான சான்றுகளோ கருத்துக்களோ வந்தால் அவற்றை அவர்கள் செவியில் போட்டுக் கொள்ளுவ தில்லை. அவற்றை மெல்ல நழுவவிடவே எண்ணுவர். அவர்கள் தரும் விளக்கங்களும் இதற்கேற்பச் சுவைகரமானவை.
வான்மீகியாரைப் போன்ற புலவர் தேவமொழிக்கே உரியவராதலால் மனித மொழியாகிய தமிழில் அப்பெயர் கொண்ட வேறு யாராவதுதான் பாடியிருக்க முடியும் என்று த்தகையவர் சிலர் கூறுகின்றனர். அத்துடன் பெருஞ் சோற்றுதியன் சேரலாதன் பாரதப் போர்க்காலத்தில் இருந்திருக்க முடியாதென்றும், அவன் முன்னோர்கள் செயலையே புலவர் அவன்மீது ஏற்றிப்பாடியிருக்கலாம் என்றும் கூறுவர். இன்னும் சிலர் இராமாயண பாரத நாடகங்களில் நடிகர்கள் கூறுவதற்காக இப்புலவர்கள் பாடிய பாடல்களே இவைகளென் கூறி ஆராய்ச்சித் துறையிலேயே தம் கற்பனைத் திறத்தைக் காட்டுகின்றனர். ஆனால், சங்கப் பாடல்களின் பொது இயல்புகளை ஒரு சிறிது அறிந்தவர்களுக்கு இவ்விளக்கங்கள் பொருந்தா விளக்கங்கள் என்று மட்டுமே தோற்றக்கூடும்.
இவ் விளக்கங்களை மறுப்பது எவ்வளவு எளிதாயினும் அவற்றினிடமாக வேறு பொருந்தும் விளக்கங்கள் அளிப்பது எளிதாயில்லை. ஏனெனில் பாரத இராமாயணங்கள் வரலாற்று நிகழ்ச்சிகள்; கற்பனைக் கதைகளுமல்ல; ஆரிய திராவிடப் போராட்ட உருவகங்களுமல்ல என்று ஒப்புக் கொண்டாலன்றி இவற்றிற்கு விளக்கம் தர முன்வரவே முடியாது.
சமஸ்கிருதப்பற்றில் எவருக்கும் இளைக்காதவரும், அதே சமயம் அது காரணமாகத் தமிழ்ப்பற்றில் பின்னடையாத வருமான விசித்திரப் பிறிவிகள் தமிழகத்தில் ஒரு சிலரே பிறந்துள்ளனர்.