பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

31

கின்றன. அவை திராவிடரை எதிர்த்து ஆரியர்களடைந்த முன்னேற்றத்தைக் குறிப்பவை என்று கருதுபவர்கூடப் பலர். சமஸ்கிருதத்தில் உள்ள இன்றைய பாரத இராமாயணங்களைப் பொறுத்த அளவில் பிந்திய கூற்றுத் தவறு என்பதற்கில்லை ஆனால்,, அவை உண்மையில் சமஸ்கிருதத்திற்கோ ஆரியருக்கோ மட்டும் உரியவை அல்ல; சமஸ்கிருத பாரத இராமாயணங்கள் அவற்றின் மிகப் பழைய வடிவங்கள், அவற்றின் மூலங்கள் என்பதுகூட உண்மையல்ல; புத்தசாதகக் கதைகளில் இடம் பெறும் இராமாயண பாரதக் கதைகளும் சமணரின் பாரத இராமாயணக் கதைகளும் அவற்றிலும் முற்பட்டவை ஆகும்.

ராமாயண பாரதங்களும் பல புராண மரபுகளும் உண்மையில் ஆரியர் வருவதற்கு நெடுநாள் முற்பட்ட திராவிடரின் பழங்கதை மரபுகளாகவோ, இலக்கிய மரபுகளாகவோ, வரலாற்று மரபுகளாகவோ நிலவியிருக்க வேண்டுமென்று அறிஞர் திருத்தந்தை ஹீராஸ் கருதியுள்ளார்.

வருங்கால ஆராய்ச்சிகள் இதற்கு மேலும் விளக்கம் தரக்கூடும். அந்நாளில் கன்னட பாரத இராமாயணங்கள், தமிழ்க் கம்ப இராமாயணம் ஆகியவற்றில் சமஸ்கிருத ஏடுகளினின்றும் மாறு பட்ட கருத்துகள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய தமிழ் சங்க இலக்கியக் குறிப்புகள் ஆகியவை புது விளக்கம் தரும் பழமைக் கருவூலங்கள் என்பது தெரியவருவது உறுதி.

புறநானூற்றுப்

பாடல்கள் இயற்றப்பட்ட காலம் பொதுவாகத் தென்னாட்டில் மலையாளமோ, தெலுங்கோ, கன்னடமோ தமிழினின்று பிரிவுறாத காலம் என்று இராவ்பகதூர் எஸ்.வையாபுரிப் பிள்ளையவர்கள் கருதுகிறார்கள். இதை மேலே காட்டியுள்ளோம். புறநானூற்றில் பாரத இராமாயணம் பற்றிய பாடல்கள் இயற்றப்பட்டகாலம் தென்னாட்டிலும் வடநாட்டிலும் கிட்டத்தட்ட ஒரே தமிழ் மொழி பேசப்பட்டகாலம். அதாவது ஆரியர் வருகையால் வடநாட்டு மொழிகள் தென்னாட்டு மொழிகளிலிருந்தும் நெடுந்தொலை வேறுபட்டு விடாத காலமாகும். தென்னாடெங்குமிருந்து கடைச் சங்க காலத்தில் மதுரைச் சங்கத்தில் வந்து தமிழ்ப் புலவர் தம் பாட்டுகளை அரங்கேற்றியதுபோல அந்நாளில் மதுரைக்கும் தெற்கே