பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அப்பாத்துரையம் - 16

அலைவாயிலும் (கடாவபுரத்திலும்) தென்மதுரையிலும் இருந்த இடைச்சங்க, தலைச்சங்கங்களில் சிந்து கங்கை சமவெளியி லிருந்தும் தமிழ்ப் புலவர்கள் வந்து பாடல்களை அரங்கேற்றி யிருந்தினராதல் வேண்டும்.

முடிநாகராயர் என்ற பெயரின் கடைசிப் பகுதி 'இராயர்' என்றெண்ணிப் பலர் மலைப்பு எய்துகின்றனர். இது ‘ர' கரத்தை முதலாக உடைய எழுத்து என்பதே மலைப்பின் காரணம். இதனாலேயே அப்பெயர் முடிநாகனாராயிருத்தல் கூடுமென்றும் பலர் கருதியுள்ளனர், அவ்வாறு எழுதியும் வருகின்றனர்.ஆனால், கடைசிப் பகுதி 'ஆயர்' என்பதே, முடிநாகர் என்பதனுடன் சேர்ந்தே இது முடிநாகராயர் (முடிநாகர் +ஆயர்) ஆகின்றது.

கொச்சி அரசர், மாவலி மரபுக்கும் பண்டைச் சேர மரபுக்கும் ஒருங்கே உரிமையுடையவர். அவர் குடிப்பெயர் கடல் மலை நாட்டுப் பெரும் படைப்பு வழியினர் என்பது. அதன் ஐந்துகிளை இனத்தவர்கள் மூத்தவர், இளையவர், பல்லுறுத்தியர், மடத்தின் கீழார் அல்லது முரஞ்சியூரார், சாலியூரார் ஆவர். பரிபாடலில் மதுரையடுத்த நாகர் நகரத்தினர், பூமுடிநாகர் என்று அழைக்கப்படுகின்றனர். எனவே முரஞ்சியூர் முடிநாகர் ஆயர் என்பவர் சேர நாட்டில் முரஞ்சியூர் சார்ந்த ஒரு நாகர் மரபினரே என்று காண்கிறோம்.