பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 16

நாளடைவில் மனித வாழ்க்கையுடன் தொடர்பற்ற மூடக் கருத்துகளாய் அவை தேய்வுற்றன.

'தமிழர் முதல் வானகப் போர்?’

கனவு கடந்து நனவிலே இவை நிலவின என்பதோ, மீட்டும் நிலவக்கூடும் என்பதோ இடைக் காலம் நம்பாத ஒன்று. மீட்டும் நிலவக் கூடும் என்ற நம்பிக்கையே நம் காலத்தில் மேலையுலகில் அவற்றை நனவாக்கிச் செயல் வெற்றிகளும் ஆக்கிற்று. ஆனால், முன் நிலவியிருக்க முடியாது என்ற இடைக்கால அவ நம்பிக்கையே இன்னும் நீடிக்கின்றது. இந்த அவநம்பிக்கை ஆராயாத, ஆராய்ச்சிப் பக்கமே நாடாத ஒரு முடிந்த முடிபாய், தற்காலத்தவரின் ஒரு புது மூடநம்பிக்கையாக இயங்குகின்றது. இம்முடிபு முற்றிலும் சரியல்ல என்பதைப் ஆராய்ச்சிகளின் போக்குக் காட்டி வருகிறது.

பழமை

இடைக்காலக் கனவுகளுக்கு எட்டாத அளவில் பண்டைக் கிரேக்கர், உரோமர் இலக்கிய கலை வாழ்வு மேம்பாட்டிருந்தது இடைக்காலக் கனவுகளுக்கு எட்டாத தொலைவிலேயே, தற்காலத்தவர் வியக்குமளவில், பினிஷீயர், எகிப்தியர், அராபியர், தமிழர், மலாய் இனத்தவர் ஆகியோர் பரந்த கடலுலக வாழ்வும், வாணிகத்தொழில் வாழ்வும் பெற்றிருந்தனர்.இக்கடலக நாகரிகங்கள்

டைக்கால உலகமறியாத அமெரிக்காக் கண்டத்திலும் சென்று பரவியதாகத் தெரிகிறது. தவிர, இன்றைய நகரங்கள்கூட முழுதும் பெற்றிரா அளவில் பண்டைய பெருநகரங்களில் வடிகால் அமைப்பு, குடிநீர்க்குழாய், குளிப்பறை ஆகிய வசதிகள் மிகுதியாய் இருந்தன. உண்மையில் இவ்வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னரே நகரங்கள் அந்நாளில் திட்டமிட்டுக் கட்டப்பட்டன என்று காணும்போது இக்கால மக்கள் நாணமும் வியப்பும் ஒருங்கே கொள்ள வேண்டும். இந்நிலையில் பண்டை நாகரிகங்கள் பற்றி இக்காலப் பொதுமக்கள் மட்டுமின்றி, அறிஞர் பலரும் கொண்டுள்ள முடிவுகள் புரட்சிகரமாக மாற வேண்டியவை என்பது மிகையன்று.

பண்டைத் தமிழரிடையே வானகச் செலவும் வானகப் போரும் இருந்தனவோ இல்லையோ; அவை பற்றிய நினைவு களும்,ஒருவேளை அவை பற்றிய மரபழிந்து விட்ட நனவு முயற்சி