36
அப்பாத்துரையம் - 16
நெடியோன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியன் அல்லன்; ஏனெனில், கடைச்சங்க காலத்தில் மட்டுமே மதுரை பாண்டியர் தலைநகராயிருந்தது. உண்மையில் தலைநகரை முதல் முதல் கொற்கையிலிருந்து தற்கால மதுரைக்கு மாற்றியவன் முதுகுடுமியே. அவனுக்கு முற்பட்ட இடைச்சங்க காலத்தில் கடல் கொண்ட குமரியாற்றின் கடல் முகமான அலைவாய் (கவாடபுரம்) நகரும், தலைச்சங்க காலத்தில் அதற்கும் தெற்கில் கடல் கொண்ட பஃறுளியாற்றின் கரையிலிருந்த தென் மதுரையும் பாண்டியர் தலைநகரங்களாய் இருந்தன என்று அறிகிறோம், நெடியோன் தலைநகர் பஃறுளியாற்றின் கரையிலே இருந்ததென்று சங்கப் பாடல்கள் பகர்கின்றன.
‘பரதன்’ ‘பரதகண்டம்’ ‘ஆதி மனு
நெடியோனுக்கு நிலத்தருதிருவிற் பாண்டியன் என்றும் பெயர் உண்டு. “நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன்” என்ற மதுரைக் காஞ்சியடிகள் இதை நினைவூட்டுகின்றன. நிலந் தருதிருவிற் பாண்டியன் காலத்திலேயே, அவன் அவைக்களத் திலேயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இது அந்நூற் பாயிரம் தரும் தகவல் ஆகும். நெடியோன் பஃறுளியாறு கடல் கொள்ளுமுன் அவ்வாற்றின் கரையிலே இருந்து ஆண்டமுதற்சங்க காலத்துப்பாண்டியன் என்பதை இது வலியுறுத்துகிறது.அத்துடன் கடல்கோளின்போது அவன் வாழ்ந்ததனால், கடல்கோளுக்குப் பின்னும் அவனே குமரியாற்றின் கடல் முகத்திலிருந்த இரண்டாவது தலைநகரான அலைவாயிலிலும் வந்து ஆட்சி தொடங்கியிருக்க வேண்டும்.
பஃறுளியாறு கடல் கோளால் அழிந்தபின், இவன் வட திசையில் தன் ஆட்சி எல்லையை விரிவுபடுத்தி, இமயம், கங்கை ஆகியவற்றைக் கைக்கொண்டிருந்ததாகத் தமிழ் ஏடுகள் சாற்று கின்றன.
“பஃறுளியாற்றுடன் பனிமலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசையாண்ட தென்னவன்’
(சிலப் 11,19,22)