தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
37
என்று சிலப்பதிகாரம் கூறுவது காணலாம். பழந்தமிழகப் பகுதிகள் கடலுள் அழிந்த அக்காலத்திலேயே இமயமும் சிந்து கங்கை வெளிகளும், கடலிலிருந்து புது நிலமாகத் தோன்றி யிருந்தன. நெடியோன் கடல்கோளுக்குத் தப்பி வந்த துணையிலி களையும், ஏலாரையும், துயருழந்தாரையும் அவ்விடங்களில் கொண்டு குடியேற்றியிருக்க வேண்டும். ஏனெனில், இமயம்வரை அவன் நாளில் ஒரே தமிழ்மொழி பேசப்பட்டதென்று கூறப்படுகிறது.
"தென் குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லைத்
99
தோன்று மொழிந்து தொழில் கேட்ப’ (மதுரைக் காஞ்சி 70-72) என்ற மாங்குடி மருதனார் கூற்று இதற்குச் சான்று.
புதுநிலமாகக் கங்கையும் யமுனையும் இமயமும் உள்ளடங்கிய பரப்பைத் தமிழகத்துக்குத் தந்த காரணத்தாலேயே நெடியோன் நிலந்தருதிருவிற் பாண்டியன் என்று பெயர் பெற்றான். இப்பெயருடன் அவன், இன்று 'இந்தியா' என்று அழைக்கப்படும் பகுதி முழுமைக்கும் ஒரே பேரரசன் ஆனான்.
வெள்ளையர் ஆட்சிக்கு முற்பட, இமய முதல் குமரிவரை ஆண்ட முதற் பேரரசன் மட்டுமல்ல; ஒரே பேரரசன், நெடியோன் என்ற இந்த நிலந்தரு திருவிற்பாண்டியனேயாவன். முன்னும் பின்னும் இல்லாத இவ்வரும் பெருஞ்செயல் இதிகாச புராணங் களில் தன் அருஞ்சுவட்டைப் பதிப்பிக்தத் தவறவில்லை. இந்தியா அல்லது பாரத கண்டம் முழுதும் ஒரு குடைக்கீழ் ஆண்டதாக இதிகாசங்களில் கூறப்படும் பரதன் இவனே என்று பண்டித சவரிராயன் போன்ற அறிஞர் கருதியுள்ளனர். பரதர் அல்லது கடலரசர் என்பது பாண்டியருக்குப் பொதுவாகவும், இவன் மரபினருக்குச் சிறப்பாகவும் ஏற்பட்ட பெயரேயாகும். பரத கண்டம் என்ற பெயரில் அது இன்னும் நிலைபெற்ற வழக்காகி யுள்ளது.
மற்றும் மிகப்பழங்காலப் புராணங்களில் இவனே ‘ஆதிமனு’ வாக குறிக்கப்படுகிறான், இந்திய புராணங்களில் காணப்படும் ‘ஆதி மனு' வரலாறு, மட்டுமன்றி, விவிலிய நூலில்