38
அப்பாத்துரையம் - 16
கூறப்படும் ‘நோவா' வரலாறும், அது போன்ற பிற இனங்களின் ஊழி வெள்ளக் கதைகளும் இவன் பழம் பெரும் புகழ்மரபில் வந்தவையே என்று பல உலகப் பழமையாராய்ச்சியறிஞர் கருதுகின்றனர்.
பண்டைச் சாவக வெற்றி
இமயம்வரை நிலப் பேரரசனாக ஆண்டதுடன் இப்பாண்டியன் பேரவா நிறைவு பெறவில்லை. அவன் மறவன் மட்டுமல்ல, கடல்மறவன் அல்லது பரதவன், தமிழ்ப்பரதவரின் கடலாட்சிக் கொடியாகிய மீன்கொடியை அவன் கடல் கடந்த நாடுகளுக்கும் கொண்டு சென்றான். முந்நீர் விழாவின் நெடி யோன் என்ற இவன் முழுச்சிறப்புப் பெயரும் தமிழ் மரபிலேயும் தமிழ்ப்புராண மரபிலேயும் வழங்கும் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்ற பெயரும், சயமாகீர்த்தி என்ற பெயரும் க்கடற்பெயரும் போர் வெற்றியைக் குறித்த வழக்குகளேயாகும். "முழங்கும் முந்நீர் முழுவதும் வளை இப் பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளில் தந்து தம்புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோர்".
(புறம் 18)
என்று தலையாலங்கானத்து நெடுஞ்செழியனைப் பாடிய
குடபுலவியனாரும்.
“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணல்”
என்று முதுகுடுமியைப் பாடிய நெட்டிமையாரும்,
66
"வானியைந்த இருமுந்நீர்ப்
பேஎ நிலைஇய இரும்பௌவத்துக்
கொடும் புணரி விலங்குபோழ -
சீர்சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ!
(புறம் 9)
(மதுரைக்காஞ்சி 75-7, 87-8)