பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

39

என்று மாங்குடி மருதனாரும் தம் காலத்திலும் பழங்காலப் புகழ்ச் செய்திகளாக இவற்றை விரித்துரைத்துள்ளனர்.

'உயர் நெல்லின் ஊர்' என்ற மதுரைக் காஞ்சியுரை நெல்லின் பெயரையுடைய ஓர் ஊரைக்குறிக்கிறது. கடலில் கலம் செலுத்திச் சென்று கொண்ட ஊராதலால், அது கடல் கடந்த ரு நாட்டின் ஊர் ன் ஊர் என்பதும் தெளிவு. இத்தகைய ஊர் நெடியோன் வெற்றிச் சின்னங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சாவகம் அல்லது சுமத்ராத் தீவிலுள்ள சாலியூரேயாகும். சாலி என்பது நெல்லின் மறு பெயர். அத்தீவின் பழம் பெயர்களையே சாவகம், பொன்னாடு, ஜவநாடு, யவநாடு ஆகியவற்றில் யவநாடு என்பதன் பொருளும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையதே. ஏனெனில் ‘யவ’ என்பது வாற்கோதுமையின் மறுபெயர் ஆகும்.

சாலியூர் இன்றளவும் 'சாரி' என்றே வழங்துகிறது. சோழர் 12-ஆம் நூற்றாண்டில் கடாரத்தில் அடைந்த வெற்றிகளிலும் சாலியூர் வெற்றி குறிக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் கடாரம் என்பது சீர்விசயம் என்ற கடற் பேரரசாய், மலாயாவையும் பல தீவுகளையும் உட்கொண்டிருந்தது. அதன் தலைநகரான சீர் விசய நகர் சுமத்ராத் தீவிலுள்ள இன்றைய ‘பாலம்பாங்' நகரமேயாகும். சாலியூர் இந்தச் சீர்விசய நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. பாண்டியன் படையெடுப்பின்போது சாலியூரே தலைநகராய் இருந்ததென்றும் பாண்டியன் வெற்றி குறித்த புதிய பேரரசத் தலைநகரே நீர்விசய நகரென்றும் நாம் கொள்ள இடமுண்டு. ஏனென்றால், சோழர் படையெடுப்பின் போது அங்கே ஆண்ட பேரரசன் சீர்மாற சீர்வியயோத்துங்கனே. அவன் குடிப்பெயரான 'சீர்மாற' என்பது 'மாறன்' அல்லது பாண்டியன் மரபை நினைவூட்டுகிறது. அவர்கள் கொடியும் மரபுப் பெயருக்கிசைய மீனக்கொடியாகவேயிருந்தது.

மன்னர் குடிப் பெயரில் மட்டுமின்றி, மக்கட் பெயர் ஊர்ப் பெயர் ஆகியவற்றிலும் மொழியிலும், வாழ்விலும் நாம் சோழர் படையெடுப்புக்கு முற்பட்ட சாவக நாட்டில் பல தமிழகத் தொடர்புகளைப் பொதுவாகவும், பாண்டி நாட்டுத் தொடர்பு களைச் சிறப்பாகவும் காண்கிறோம். மதுரை பண்டைத் தலைநகரின் பெயராகவும், ஒரு தீவின் பெயராகவும், ஒரு கடலிடுக்கின் பெயராகவும் நிலவுகின்றது. மலாயா என்ற நாட்டுப்