40
அப்பாத்துரையம் - 16
பெயர் இன்றும் மலையம் என்ற பொதிகை மலையை நினைவூட்டுவதாகும். இவையன்றிப் பாண்டியன், மதியன், புகார், மலையன் கோ, செம்பூட்சேஎய், குறிஞ்சி, செங்கரை ஆகிய தமிழ்ப் பெயர்களும் அங்கே நிலவுவதாக மகாவித்வான் இரா. இராகவய்யங்காரின் தமிழ் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. சாவகத்தில் சங்க காலத்தில் தமிழ்ப் பேசப்பட்டதாக மணிமேகலை கூறுகிறது. அத்துடன் சோழர் படையெடுப்புக்கு முன்னும் பின்னும் அங்கே பல தமிழ்க் கல்வெட்டுக்களும், பட்டயங்களும், பண்டைத் தமிழக எழுத்துக்களிலேயே வரையப்பட்ட சமஸ்கிருதக் கல்வெட்டுகளும் கிடைக்கின்றன.
முந்நீர் விழா
6
சயநாடு அல்லது சாவகத்தை வென்ற பெரும் புகழாளன் என்ற முறையிலேயே நெடியோன் சயமா கீர்த்தி என்றழைக்கப் பட்டான். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவரான இறையனார் அகப்பொருளுரையின் ஆசிரியர் சயமா கீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன்' என்று கூறுவதால் இது நெடியோன் பெயரே என்பது தெரியவரும். சயநாடு, ஜவ நாடு என்ற நாட்டுப் பெயர்கள் அமைந்த சாவக நாட்டுக் கல்வெட்டுகள் பல உண்டு ஜயநகரம், சுந்தர பாண்டியன் என்ற பெயர்களை உட்கொண்ட கல்வெட்டும் ஒன்று உளது. ‘ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக' என்பது அதன் வாசகம் ஆகும். 'பாண்டிய' என்ற பெயருக்கேற்ப இந்தக் கல்வெட்டில் மீன் இலச்சினையும் காணப்படுகிறது.
வடிம்பலம்ப நின்ற பாண்டியன், முந்நீர் விழவின் நெடியோன் என்ற பெயர்கள் கடற்பேரரசன் என்ற முறையில் கடல் கடந்த நாட்டில் அவன் நடத்திய கடல் விழாவைக் குறிக்கின்றன. அதில் அவன் பாறையில் தன் அடிகளைப் பொறித்து அதன்மீது கடல் அலைகள் வந்து அலம்பும்படி செய்ததாக அறிகிறோம். இதுவே இன்றுவரை அந்நாட்டவ ரிடையே அரசர் முடிசூட்டு விழா மரபாக இருந்து வருகிறது. மன்னர் இவ்வழக்கத்தைத் தலைமுறை தலைமுறையாக மேற்கொண்டிருந்தனர் என்பதைக் கல்வெட்டுகள் பல