பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் - 16

எனக் குத்து மதிப்பாகக் கூறுவது போலவே, பல ஆசிரியர்கள் தொல்காப்பியத்துக்கும், நெடியோனுக்கும் கி.மு.500 என்ற கால மதிப்புத் தருகின்றனர். ஆனால், கடைச் சங்கப் புலவருள் மாமூலனார் முதலிய பலர் அசோகனுக்கு முற்பட்டவர் என்று கருத இடமுண்டு. தவிர பாரதப் போர்க் காலம், தொல்காப்பியர் காலம் ஆகிய இரண்டிலுமே எது முந்தியது, எது பிந்தியது என்று கூறுவது முடியாது. இன்றைய புராண இதிகாச அடிப்படை யிலேயே பாரதப் போர் முந்தியதென்று ஆராய்ச்சியாளர் மதிப்பிட்டுள்ளனர். எப்படியம் தொல்காப்பியர், நெடியோன் காலங்கள் கி.மு. 500க்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டிருத்தல் சாலும். ஏனெனில் இலங்கை வேறு, தற்போதைய தமிழகம் வேறு என்ற நிலை பெரிதும் இடைச்சங்க காலத்தில் ஏற்பட்ட நிலையேயாகும். இது பாரதத்துக்கு மட்டுமின்றி, இராமாயண காலத்துக்கும் முற்பட்ட நிலைமை என்று குறிப்பிடத் தேவையில்லை.

நெடியோன் காலத்துக்குரிய, அதாவது பிற்காலச் சோழன் படையெடுப்புக்கு முந்திய தமிழ்க் கல்வெட்டுகளும் தமிழக வாணிக, குடியிருப்புச் சின்னங்களும் சுமத்ரா, மலாயா நாடுகளில் மட்டுமன்றி சீயம், இந்து சீனா ஆகியவற்றிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் பரந்து காணப்படுகின்றன. இந்து சீனாவில் பல நூற்றாண்டுகளாகச் 'சம்பா' என்ற தமிழ் பேரரசே நிலவி வந்ததாக அறிகிறோம். சீனத்திலும், சப்பானிலும்கூடப் பண்டைத் தமிழ்த் தொடர்புகளைக் காணலாம்

யாராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

என்று

கடலக மேலையுலக, தொலைக் கீழையுலகத் தொடர்புகள்.

பழமை

தவிர கி.மு. 2000க்கு முன்னிருந்தே எகிப்து, பாலஸ்தீன், பாபிலோன் ஆகிய மேலை நாடுகள் கிழக்கே சீனத்துடன் நிலப் போக்கு வரவுகளும், கடற் போக்கு வரவுகளும், வாணிகத் தொடர்பும் உடையவையாய் இருந்தன. சீனத்தின் பட்டும் மாணிக்கமும் மேலை நாடுகளிலும், எகிப்தின் பவளங்கள், வெள்ளீயம், துணிவகைகள் ஆகியவை சீனத்திலும் பரிமாறப் பட்டன. கி.மு.1500க்குப் பின்நிலப் போக்கு வரவு திடுமென நின்று