தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
43
விட்டது. ஆரியர் போன்ற பண்படா நாடோடி இனங்களின் இடப் பெயர்வால் ஏற்பட்ட விளைவு இது என்று தோன்றுகிறது. தனால் கடல் வாணிகமும் கடல் போக்கு வரவுகளும் மிகுதியாயின. தமிழகமும் மலாயாவும் இக்கடல் வாணிகத்தில் நடு டம் வகித்ததினால் பெரும் பயன் அடைந்தன. மலாயாக் கடற்கரையைச் சுற்றிச் செல்வதற்குப் பதில் கரைக்குக் கரை கடந்தும், தமிழகக் கடற்கரையைச் சுற்றுவதற்குப் பதில் கீழ்க்கரைத் துறைமுகங்களிலிருந்து மேல்கரைத் துறைமுகங்களுக்கு கடந்தும் வந்ததால், மலாயா, தமிழகம் ஆகிய இரு நாடுகளிலும் உள்நாட்டு வாணிக வழிகளுடன் இது இணைந்தது.
தாடக்கத்தில் தமிழரே கீழ்க் கோடிக்கும், மேல் கோடிக் கும் இடையே வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், மேற்கே பினீஷியரும், எகிப்தியரும், அராபியரும் படிப்படியாகத் தமிழ் வணிகருடன் அதைப் பங்கிட்டுப் போட்டி வளர்த்தனர். அது போல மேற்கே தொடக்கத்தில் மலாய் மக்களும் பின் சீனரும் பங்கு கொண்டனர். இந்தப் பழங்கால அகல் உலக வாணிகத்தில் தமிழகம் போக்கு வரவு வழியின் மையமாக இருந்தது போலவே, அதன் சரக்குகளும் பேரிடம் வகித்தன. தமிழகத்தின் பண்டைப் பெருஞ் செல்வத்துக்கு இதுவே காரணம்.
கி.மு. 3000 -லிருந்து உரோமப் பேரரசின் வீழ்ச்சிக் காலமாகிய கி.பி. 500வரை தமிழகமே கடல் வாணிகத்தில் இடைவிடாத நீண்ட வாழ்வுடையதாயிருந்தது. ஏனெனில் தமிழகத்துடன் மேல் திசையில் முதலில் எகிப்தும் பாலஸ்தீனமும், அவர்கள் நாகரிகம் வீழ்ச்சியடைந்த பின் கிரேக்க உரோமரும், கிரேக்க உரோமர் வீழ்ச்சிக்குப் பின் அராபியரும் தொடர்பு கொண்டனர். கீழ்திசையில் இதுபோலவே முதலில் மலாய் இனத்தவரும் அவர்கள் கை தளர்ந்த பின் சீனரும் தமிழருடன் வாணிகத் தொடர்பில் பங்கு கொண்டனர்.
இக்காலங்களிலே அகல் உலகுடன் தமிழகம் கொண்ட அரசியல் கலை நாகரிகத் தொடர்புகள் மிகப் பலவாயிருந் திருத்தல் வேண்டும். இவற்றின் பெரும்பகுதியை நாம் அறிய முடியவில்லை. ஆனால், அறியத்தக்க அளவிலும் பொதுவாகக் கீழ்திசையையும் சிறப்பாகத் தமிழினத்தையும் புறக்கணிக்கும் வெள்ளை யறிஞர் போக்கு உண்மை துருவிக் காண்பதில் தடை