தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
கடல்கடந்த கீழை உலகத் தொடர்புகள்: அரசியல் தூதர் தொடர்புகள்
45
கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே தமிழருக்கும் இலங்கைக்கும் அரசியல், சமுதாய, மணத் தொடர்புகள் இருந்தன. கி.மு.2-ஆம் நூற்றாண்டிலும் 1-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் தமிழ்மரபினர் இலங்கையில் அரசாண்டனர். கி.மு.26லும் 20லும் பாண்டிய அரசன் உரோமப் பேரரசர் அகஸ்டஸிடம் அரசியல் வாணிகத் தொடர்பும் படைத் துறைத் தொடர்பும் கோரி இரு தடவை தூதர் அனுப்பியிருந்ததாக ஸ்டிராபோ என்ற பண்டை உரோம ஆசிரியர் குறிக்கிறார். கி.மு.2-ம் நூற்றாண்டின் ஹான் பேரரசர் காலத்திலிருந்து முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தி லிருந்து சீனப் பேரரசருக்கு இது போன்ற தூதுகள் சென்றதாகப் 'பான்கூ' என்ற கடைச்சங்க காலத்துச் சீன ஆசிரியர் குறித்துள்ளார்.
சீனப்பேரரசர் ஹுவான் -தி காலத்தில் கி.பி.159லும் 16எலும் தமிழகத்தின் ஒரு பேரரசனிடமிருந்து அரசியல் வாணிகத் தூதுக் குழுக்கள் சென்றதாகச் சீனர் குறித்துள்ளனர். தந்தம், காண்டாமா (காண்டா மிருகம்) ஆமை ஓடுகள் ஆகியவற்றை அவர்கள் கொண்டு சென்றதாகத் தெரிகிறது. தமிழர் அந்நாளிலேயே தன் ஆப்பிரிக்காவுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும் இதே செய்தி காட்டுகிறது. ஏனெனில், இன்றும் காண்டாமா அந்நாட்டுக் குரிய விலங்கு ஆகும். காம்போச நாடும், சம்பா நாடும் சீனத்துக்கு அனுப்பிய பொருள்களில் தமிழகத்தின் வைடூரியங்களும், துணி மணி மணப் பொருள்களும், யானையும் இ டம் பெற்றனவாம்.
சம்பாவின் பண்டை எழுத்தும், சப்பானின் பண்டைய கடகம' எழுத்து முறையும் பண்டைத் தமிழ் எழுத்தையே தழுவியவை என்று மேனாட்டறிஞர் கருதுகின்றனர்.
தமிழரின் இவ் அகலுலகத் தொடர்பைக் குறிக்காத வரலாற்றாசிரியர் இல்லை என்னலாம். ஆனால், தமிழக வரலாற்றில் இவற்றின் படிப்பினையையும், தொல்காப்பியம் சங்க இலக்கியம் ஆகியவற்றின் படிப்பினையையும் வரலாற்றாசிரியர் மறந்துவிடுகின்றனர். சங்க இலக்கியங்கள் பல வரலாற்று