பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. வடதிசைத் தொடர்புகள்

தமிழகத்தின் மிகப்பழமை வாய்ந்த தொடர்புகள் கிழக்கு, மேற்குத் தொடர்புகளே. அவையே உயிர்த்தொடர்புகளாகவும் வளமான தொடர்புகளாகவும் அமைந்துள்ளன. இது இயல்பே. ஏனெனில், பண்டை நாகரிக உலகம் கிழக்கு மேற்காகவே நெடுந்தொலை பரவியிருந்தது. அதன் தெற்கு வடக்கு அகலம் கிழக்கு மேற்கு நீளத்தை நோக்க இன்றுகூட மிகுதியன்று. இதற்கு இயற்கையான நில இயல் காரணங்களும் வரலாற்றுக் காரணங் களும் உண்டு.

முதலாவதாக, உலகின் வடகோடியும், தென் கோடியும், இன்றளவும் உயிரின வாழ்வுக்கே, புல்பூண்டுகளுக்குகே இடம் தராதவை. தவிர மனித நாகரிகம் மலையில் பிறந்ததாயினும், அங்கே சிறு வாழ்வே வாழ்ந்தது. ஆற்றோரங்களில் ஓரளவு தழைத்தாயினும், அவ்வழி உலகில் பரவவில்லை. கடலோர மாகவே, கடல் கடந்தே. அது உலகில் பரவமுடிந்தது. இவ் வகையில் தென்ஆசியா, நடுநிலக் கடல் சூழ்ந்த நிலம், நடு அமெரிக்கா ஆகியவற்றின் வாய்ப்புப் பெரிது. ஏனெனில் உலகின் வடபாதி கடலற்ற முழு நிலப்பரப்பு. தென்பாதியோ நிலமற்ற கடல் பரப்பு, அல்லது தொடர்பற்றுத் துண்டுபட்டுக் கிடக்கும் நிலத் தொகுதி, இவற்றுக்கு மாறாக நடுஉலக, சிறப்பாக, உலக நடு வரைக்குச் சற்று வடக்கிலுள்ள நடு உலகு வளையம் கடலுடன் நிலமும், நிலத்துடன் கடலும் கலந்து உறவாடும் திருநலம் உடையது.

தமிழகம் நாகரிக உலகின் நடுமையம். நாகரிக உலகின் உயிர்மையமும் அதுவே; உலகின் கடல்வழி உயிர்ப் பாதைகள் அனைத்தின் நடு இணைப்பாகவும் அது அமைந்துள்ளது.மனித இனநாகரிகக் கொடியும் அதனின்றே பல பலதிசைகளிலும் கிளைத்துச் செல்வது காண்கிறோம். ஆனால், இந்த நாகரிக ஒளி