பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

49

விடாமல், கிட்டத்தட்டச் சீனத் தொடர்பு போலவே டையறாது நீடித்துள்ளது. ஆயினும் சீனம், சிறப்பாகத் தென்சீனம் வட வடதிசை வாடைக்குப் பெரிதும் ஒதுங்கி வாழ்ந்ததனால், மூவாயிரம் ஆண்டுகளாக ஒரே மொழி, இலக்கியம், கலை, நாகரிகத் தொடர்ச்சியுடையதாய் இருக்க முடிகிறது. ஆனால், சீன, சப்பானிய உலகுகளுக்குப் புத்தநெறி அளித்த சிந்து கங்கைச் சமவெளியிலே அந்தப் புத்தர் கால மொழியோ, இலக்கியமோ, சமய வாழ்வோ கூட நீடித்து நிலவவில்லை. மொழி இலக்கியத் துறையில் புத்தர் கால முதல் இன்றுவரை பாளி பாகத நாகரிகம், சமஸ்கிருத நாகரிகம், அப்பிரும்ச மொழி வாழ்வு, தற்காலத் தாய்மொழி வாழ்வு என்ற நான்கு தலைமுறைகள் ஆகியுள்ளன. இவற்றிடையேகூட ஒன்று பட்ட வாழ்வு இல்லாது, இடத்துக்கிடவேறுபாடும், ஓரிடத்துக் குள்ளேயே வகுப்புக்கு வகுப்பு வேறுபாடும் மிகுதி. தமிழகத்தின் தனிப்பெரு வாழ்வைக்கூட இவை அவ்வப்போது தாக்க நேர்கின்றது.

தமிழக வடதிசைத் தொடர்புகள் தெற்கினின்றும் வடதிசை செல்லும்போதெல்லாம் நாகரிக ஒளித் தொடர் பாகவும், வடக்கினின்று தெற்கே வரும்போதெல்லாம் நாகரிகச் சீர்குலைவுத் தொடர்பாகவுமே இருந்து வந்திருக்கின்றன, இது தமிழகத்தின் குற்றமன்று; சிந்து கங்கை சமவெளியின் குற்றமுமன்று. ஏனெனில் மிகப்பழமையான அடிப்படைத் தொடர்பில், இரண்டும் தெற்கினின்று பரவிய ஒரே பேரின நாகரிகமேயாகும். குற்றம், சிந்து கங்கைச்சமவெளி வட ஆசியப் பரப்புடன் நிலத் தொடர்பு பட்டு, வாடையின் நடுநேர் வழியில் கிடப்பதேயாகும். இதனால் புத்தர்காலக் கங்கை வெளியுடன் தமிழகத்துக்கு இருந்த நற்றொடர்புகள் புத்தருக்குப் பிற்பட்ட காலத்தில் சீர்குலைந்தும், இஸ்லாமிய காலங்களில் இன்னும் இடர்ப்பட்டும், அதன்பின் முற்றிலும் இடக்குற்றும் வந்துள்ளன.

இந்திய மாநிலத்திலே வடக்கு நின்றும் தெற்கு; மேற் கினின்றும் கிழக்கு நோக்கிய வெற்றிகள் குறைவு. தெற்கினின்றும் வடக்கு; கிழக்கினின்றும் மேற்கு நோக்கிய வெற்றிகளே