50
அப்பாத்துரையம் - 16
தொகையில் பல. அத்துடன் முந்தியவை அயல் தொடர்பு களாகவும், அழிவுத் தொடர்புகளாகவுமே உள்ளன. பிந்தியவையோ மாநில வாழ்வுக்கு ஒற்றுமையும் ஆக்கமும் பீடும் தரும் தேசியத் தொடர்புகளாக உள்ளன. ஆயினும் இந்திய மாநில வரலாறு எழுதியவர்கள் பெரும்பாலும் அயலினத்தவர் அல்லது அயலின நோக்குடைய வர்கள். அத்துடன் அவர்கள் உலக நாகரிக அலைகளைத்தவறாகப் புரிந்து கொண்டவர்கள். இக்காரணங் களால் அவர்கள் அழிவுத் தொடர்புகளையே நுணுகி நுணுகி விரித்து ஆராய்ந்துள்ளனர். ஆக்கத் தொடர்புகளைப் புறக்கணித்தும் இருட்டடித்துமே வந்துள்ளனர்.
நெடியோனுக்குப் பின் கங்கையிலும், இமயத்திலும் தம் ஆட்சி அல்லது புகழ்த்தடம் பொறிக்க முயன்ற தமிழரசர் மிகப்பலர். அதன் எதிர் விளைவாக ஒரே ஒரு சமயம் வடதிசை பேரரசுகளும் தெற்கே ஆதிக்கம் பரப்ப முயன்றதுண்டு.ஆயினும் இத்தெற்கு வடக்குத் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஒரு தனிப்பண்பு காணலாம். அது பெரிதும் வடகிழக்குத் தெற்குத் தொடர்பாக இருந்தது. அதில் தமிழகத்துடன் கங்கை வெளியே போட்டியிட்டது. சிந்துவெளி அதில் மிகுதி கலக்கவில்லை. நாலாயிர ஆண்டுகளுக்குமுன் சிந்து வெளியும் பண்டை மாநில நாகரிகத்தில் உயிர்ப் பங்கு கொண்டிருந்தது. ஆனால், ஆரியர் வரவால், அது மாநிலத்தின் உயிர்த் தொடர்பற்ற பகுதி ஆயிற்று. அப்பகுதியும் அதற்கு வாயிலாய் அமைந்த வடமதுரை, தில்லிப் பகுதியும் அயல் நிலவாடைக்கு வழிவிட்டு, அதற்கு மூலதளமாய் அமைந்ததன்றிவேறுஉயிர் நாகரிகத் தொடர்புடையதாய்
இல்லை.
வடதிசை மகதப் பேரரசர்: சிசு நாகர், நந்தர்
பண்டைத் தமிழ் ஏடுகள், பண்டைத் தமிழக வரலாற்றுக் குறிப்புகள் மட்டும் உடையனவல்ல, பண்டைக் கங்கை வெளிக் குறிப்புகளும் அவற்றில் மிகுதி. எடுத்துக்காட்டாக, காஞ்சியும் புகாரும், மதுரையும், வஞ்சியும் குறிப்பிடப்படுவது போலவே வடதிசை பண்டைப் பெருநகரமான பாடலிபுரமும் குறிப்பிடப் படுகிறது; இந்நகரம் கி.மு.500 முதல் 475 வரை ஆண்ட அஜாத