பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

51

சத்துரு என்ற சிசு நாகமரபுப் பேரரசனால் நிறுவப்பட்டது. இது ஆயிரமாண்டு பல பேரரசுகளுக்குத் தலைநகராயிருந்து கி.பி.6-ஆம் நூற்றாண்டில் அழிவுற்றது. இதன் மிகப் பழமையான சமகால இலக்கியக் குறிப்புகள் தமிழ் ஏடுகளிலேயே உள்ளன. "வெண்கோட்டியானை சோனை படியும் பொன்மலி பாடலி பெறீ இயர்"

(குறுந். 75)

என்ற படுமரத்து மோசிக்கீரனாரின் பாடல் சோனை யாற்றங் கரையிலுள்ள பாடலி நகரத்தையும், அதன் செல்வத்தையும் குறிப்பது காணலாம். இந்தச் செல்வத்துக்குப் பெரிதும் காரணமாயிருந்தவர் பேரரசர் அசோகனுக்கு முன் அந்நாட்டை ஆண்ட நந்தர்கள் ஆவர். அவர்கள் தம் பெருஞ் செல்வத்தைக் கங்கையாற்றின் நடுவே புதைத்து வைத்திருந்தனர். 2500 ஆண்டுகட்கு முற்பட்ட இச்செய்தியைக் கடைச்சங்க காலத்துப் பழம்பெரும் புலவர் மாமூலனார் குறித்துள்ளார்.

“பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை

நீர் முதல்கரந்த நிதியங்கொல்லோ?"

(அகம். 265)

இந்நகரை நிறுவிய பேரரசனான அஜாகசத்துருவின் பெயரன் உதயணன் என்று கூறப்படுகிறது. இன்று மரபிழந்து மறக்கப் பட்டுவிட்ட ஏதோ ஒரு வடதிசைத் தாய்மொழியில் அவன் குடிமரபின் வரலாறு ஒரு பெருங்காவியமாக எழுதப்பட்ட தென்று அறிகிறோம். அதன் பெரும் பகுதி தமிழிலும் பெருங்கதை என்ற பெயருடன் சிதைவுற்ற ஓர் ஏடாக நிலவுகிறது. பாடலிபுர நகரம் பொன்னுக்கு மட்டுமன்றிப் பொன்னில் நல்ல கலை வேலைப்பாடுடையவர்களுக்கும் பேர்போனதென்று அது குறிக்கிறது.

"பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞர்” (பெருங்கதை: உஞ்சைக் காண்டம்) என்பது அந்நூலின் ஆசிரியரான கொங்கு வேள் தரும் தகவல் ஆரும்.

இக்குறிப்புகள் அசோகனுக்கு முற்பட்ட புத்தர்பிரான் காலத்தைச் சார்ந்தவை. இவற்றில் இறுதிக் குறிப்பு நீங்கலாக,