52
அப்பாத்துரையம் - 16
ஏனையவை கி.மு. 6 -முதல் 4 -ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்த புலவரின் சமகாலக் குறிப்புகள் என்பதும் கவனிக்கத்தக்கது.
மோரியர் தொடர்:
சோழப் பேரரசன் இளஞ் சேட்சென்னி
அசோகன் மரபினர் 'மோரியர்' ஆவர். இவர்கள் கி.மு. 4 - ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி.மு.2 -ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஆண்டவர்கள். அவர்களைப் பற்றிய சமகாலக் குறிப்புக்களும் சங்க இலக்கியத்தில் நிரம்ப உள்ளன. இவர்கள் அசோகன் காலத்தவர்களல்லர், பிற்காலத்தில் அதாவது கி.மு. 2ஆம் நூற்றாண்டினர் அல்லது கி.பி. 2-ஆம் நூற்றாண்டினர் என்று கொள்ள ஆதாரம் தேடுபவர் உண்டு. ஆனால், அசோகனைப் பற்றியே வரலாற்றாசிரியர்கள் கொண்ட ஒரு தவறான கருத்துத்தான் இதற்குக் காரணம். அசோகன் பேரரசின் தென் எல்லை மைசூர் என்று அறிகிறோம். ஆனால், அசோகன் கலிங்கத்தை மட்டுமே வென்றான்.தென்னாட்டின் வடபகுதியை வெல்லவில்லை. ஆகவே பிந்துசாரனே பண்டைத் தமிழகம் நீங்கிய தென்னாட்டை வென்றிருக்க வேண்டும் என்று பலர் கருதியுள்ளனர். மிக அண்மைக் காலத்தவரான திபெத்திய வரலாற்றாசிரியர் தாரநாதர் குறிப்பை இதற்கு ஆதரவாகச் கொள்கின்றனர்.
உண்மை என்னவெனில் கலிங்கம், மோரியர் காலத்தில் ஒரு பேரரசு, சிறிய நாடு அன்று. அது அசோகன் பேரரசைவிடப் பரப்பிலோ ஆற்றலிலோ குறைந்ததன்று. பின்னாளைய ஆந்திர பேரரசைப்போலவே அதுவும் கங்கை முதல் வடபெண்ணை வரை பரவியிருந்தது.மோரியருக்கு முற்படக் கலிங்கரும் அவருக்கு முற்பட்ட நந்தரும் சிசுநாகரும் கூடத் தம் பேரரசல்லையை மைசூர் வடஎல்லைவரை பரப்பியிருந்தனரென்றும் இப்போது தெரிய வருகிறது. இப்பேரரசின் விரிவு அஜாதசத்துருவின் காலத்திலேயே நடைபெற்றதாகலாம். தமிழகத்திற்கும் அப்பேரரரசுக்கும் இடையிலுள்ள வடுசுகர் கோசர் என்ற முரட்டு வகுப்பினரே அதன் எல்லையில் வாழ்ந்தனர். அசோகன் கலிங்கத்தை வெல்லா விட்டால், கலிங்கர்களே அசோகனை வென்றிருப்பர். மோரியர் வீழ்ச்சிக்குப்பின் கலிங்கப் பேரரசன்