தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
53
காரவேலனும், ஆந்திரப் பேரரசரும் அவ்வாறே வென்றனர். ஆகவே தமிழக எல்லை வரை அசோகன் பேரரசு பரவியது அவன் முன்னோர் காலத்திலன்று. கலிங்கப் பேரரசின் வெற்றியே அவனை அப்பேரரசின் எல்லையாகிய தமிழக எல்லைக்குக் கொண்டு வந்தது. அது கடந்தும் அவன் சேர, சோழ, பாண்டிய அரசர்களை வெல்ல முயன்றான். அது முடியாததனாலேயே அவர்களுடன் நேசத் தொடர்பு வைத்துக் கொண்டான்.பிற்கால வரலாற்றுச் செய்திகள் பல இதனைத் தெளிவுபடுத்தும்.
அசோகன் காலத்து மோரியப் படைகளைத் தமிழகப் பேரரசனான சோழன் இளஞ்சேட்சென்னி செருப்பாழி என்ற பெரும்போரில் வென்றான். தமிழக வரலாற்றில் நாம் காணும் முதற்பெரும் நிலப்போர் இதுவேயாகும். இதனைப் பற்றிய முழு விவரங்களும் சங்க இலக்கியப் பாடல்களில் சிதறிக் கிடக்கின்றன. முனைவர் எம் இராசமாணிக்கனார் இவற்றை நமக்குத் திரட்டிக் கோவைப்படுத்தித் தந்துள்ளார்.
ளஞ்சேட் சென்னியின் காலம் ஏறத்தாழ கி.மு. 3 - ஆம்
நூற்றாண்டு ஆகும்.
மோரியர் படையெடுப்பு: வாட்டாற்றுப்போர்: செல்லூர்ப் போர்
சங்க காலத்தின் பின்னாட்களில் கல்வெட்டுகளில் நாம் வடுகவழி என்ற கீழ் கடற்கரையோரப் பாதைபற்றிக் கேள்விப் படுகிறோம். பல்லவ சோழ காலங்களில் தமிழகத்தையும் ஆந்திரத்தையும் வட இந்தியாவையும் இது இணைத்தது. ஆனால், சங்க காலத்தில் இவ்வழி காடுகள் நிறைந்ததாகவும் எளிதில் கடக்கக் கூடாததாகவுமே இருந்தது. ஏனெனில் நீலகிரி வழியாகவும் குடகு வழியாகவும் பயணம் செய்வோரும் படை யெடுப்போரும் சென்று வந்தனர். துளுவ நாடே தமிழகத்தின் வடக்கு வெளியாய் இலங்கிற்று. அந்நாளில் அது பொன் விளையும் திருநாடாக விளங்கிற்று படையெடுப்பாளர்களை இந்தப் பொன் வேட்கையும் கவர்ந்திருந்தன என்பதில் ஐயமில்லை.
மோரியர் முதற்கண் தம் எல்லைப்புறத்திலிருந்த கோசர் களைத் துளுவ நாட்டின்மீது ஏவினர். இக்கோசர் கோவா