பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் - 16

அருகிலுள்ள தற்காலக் கோலாப்பூரைச் சார்ந்தவர்கள். சங்க காலத்தில் தமிழர் நிலப் படைகளில் அவர்கள் வீரராகச் சேர்ந்து பணியாற்றிய துண்டு. அவர்கள் சொன்னசொல் காப்பவர் களென்று அந்நாளில் புகழ் பெற்றிருந்தனர் சங்க ஏடுகள் இது காரணமாக அவர்களை 'வாய்மொழிக் கோசர்' என்றும், அசோகர் கல்வெட்டுக்கள் ‘சத்தியபுத்திரர்' என்றும் பரவுகின்றன.

துளுவ நாட்டை அந்நாளில் ஆண்டவன் நன்னன் என்பவன். சங்கப் பாடல்களில் பின்னாட்களில் சேரர் போர்களில் மிகுதி ஈடுபட்ட நன்னன் இவன் மரபினன் ஆகலாம். இடைக் காலங்களிலும் இவன் பெயர் மரபை, நன்னிச் சோடர் முதலான பெயர்களின் முதல் பகுதியில் காணலாம்.

கோசர் நன்னனைப் போரில் முறியடித்து அவனைக் காடுக ளுக்குத் துரத்தினர்; அவன் பட்டத்து யானையைக் கொன்றனர்; துளுவ நாட்டைக் கைப்பற்றி அங்கேயே தங்கினர். அந்நாட்டின் சிறந்த கோட்டை நகராகிய ‘பழி'யை அரணாக்கி வலிமைப் படுத்திக் கொண்டு, அதையே தம் அடுத்த படையெடுப்புக்குரிய மூலதளமாக்கிக் கொண்டனர். பின் அவர்கள் சேரனையும், அதியன் மரபினனாகிய எழினியையும், சோழ நாட்டெல்லை யிலுள்ள அழுந்தூர்வேள் திதியனையும், பாண்டிய நாட்டெல்லையிலுள்ள மோகூர்த் தலைவனையும் படிப் படியாகத் தாக்கினர்.

சேரர் படைத்தலைவன் குதிரை மலைக் கோமானாகிய பிட்டங்கொற்றன் மோரியருடன் பல தடவை போர் புரிந்தான். இவற்றில் எப்பக்கம் வெற்றியடைந்தது என்பது தெரியவில்லை. ஆனால், மோரியர் கை வலுத்திருந்தது என்றே கூறவேண்டும். ஏனெனில் அவர்கள் எழினியைத் தாக்கி வாட்டாறு என்ற இடத் திலும் செல்லூர் என்ற நகரின் கீழ் திசையிலும் பெரும் போர் ற்றினார்கள். செல்லூர்க் கீழ்திசைப் போரில் எழினி மார்பில் வேல் பாய்வுற்று மாண்டான்.

சோழ நாட்டெல்லையிலுள்ள அழுந்தூர் வேள் ஆகிய திதியனிடத்திலும் பாண்டி நாட்டெல்லையிலுள்ள மோகூர்த் தலைவனிடத்திலும் மோரியர் கை வரிசை சாயவில்லை. திதியன் அவர்களை முறியடித்துத் துரத்தினான், மோகூர் பணியாமல்