பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

55

நிமிர்ந்து நின்றது. பாண்டிய நாட்டுக்குள் மோரியர் அடி யெடுத்து வைக்க முடியாமல் இது தடுத்து நிறுத்திற்று.

இச்சமயம் வரை மோரியப் பேரரசன், பேரரசுப் படை தமிழகம் புகவில்லை. எல்லைப்படைகளே ஈடுபட்டிருந்தன. துளுவ நாட்டு முதல் வெற்றியின் பின் சிறுசிறு தலைவர்களிடம் ஏற்பட்ட தோல்விகள் அவனைத் தட்டி எழுப்பின. அவன் இப் போது பேரரசின் பெரும்படையையே திரட்டினான். துளுவ நாடு அல்லது குடகையும் மைசூர் அல்லது எருமை நாட்டையும் கடந்து தமிழகத்துக்குள் வரும் வழியிலுள்ள மலைகளை ஆற்றூர்க் கணவாய்ப் பக்கம் வெட்டிச் செப்பனிட்டுத் தேர் செல்லும் பாதை உண்டு பண்ணினான். இவ்வேலை சில ஆண்டுகள் பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் அம்முயற்சி சங்க ஏடுகளில் பல இடங்களில் சுட்டியுரைக்கப்படுகிறது.

பாதை முற்றுப் பெற்றபின் கடலெனப் பரந்த மோரியப் பேரரசின் பெரும் படைகள் பேரேரியில் வந்து தேங்குவது போலத் துளுவ நாட்டில் வந்து குழுமிப் பேராறுகளாகத் தமிழகத்துக்குள் வந்து பாய்ந்தன.

செருப்பாழிப் போர்: சோழப் பேரரசன் பெருவெற்றி

தமிழகத்துக்கு வந்துற்ற பேரிடையூற்றைச் சோழப் பேரரசன் இளஞ்சேட் சென்னி உணர்ந்து கொண்டான். இனித் தமிழகவேளிர் கைகளிலும் சிற்றரசர் மீதும் பொறுப்பைவிட்டு விட்டு ஒதுங்கியிருப்பது தகாது என்று எண்ணினான். அவனும் தன் பேரரசுப் பெரும் படைகளைத் திரட்டினான். அந்நாளில் சேரரும் பாண்டியரும் அவன் ஆணையின் கீழ்ப்பட்ட துணையரசுகளாய் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் போர் தமிழகப் போர் ஆயினும் வெற்றிகள் சோழப் பேரரசன் வெற்றியாகவே குறிக்கப்படுகின்றன. வடவர் புராண மரபில் சேர, பாண்டியரைவிடச் சோழருக்கே பேரிடம் ஏற்பட்டது, இப்பெரும் போரின் புகழ் காரணமாகவே என்னலாம்.

சோழநாட்டெல்லையிலேயே மோரியர் படைகள் பல தடவை நையப் புடைக்கப் பெற்றன. மோரியர் மீண்டும் மீண்டும் புதுப்புதுப் படைகள் அனுப்பினர். வடதிசைப் பேரரசின் முழு