56
அப்பாத்துரையம் - 16
ஆற்றலும் இதில் ஈடுபடுத்தப்பட்டது. ஆயினும் சோழப் பெரும் படையும் பிற தமிழகப் படைகளும் அவர்களைச் சிதறடித்தன. உயிரிழந்தவரும், உறுப்பிழந்தவரும் போக மீந்தவர் சோழ நாட்டின் எல்லையிலிருந்து துளுவ நாடு வரை தப்பினோம் பிழைத்தோம் என்றோடினர்.
திதியனைப்போல இளஞ்சேட் சென்னி மோரியரை முறியடித்ததுடன் அமையவில்லை. அவர்கள் மறுபடி தமிழகப் பக்கம் திரும்பாதிருக்கும்படி செய்ய அவன் எண்ணினான். ஆகவே தோற்றோடிய படைகளைத் துளுவ நாட்டுக்கே துரத்திக் காண்டு சென்றான். மோரியர் மூலதளமாகிய பாழிக் கோட்டையையே முற்றுகையிட்டான்.
தாக்கியவர் இப்போது திருப்பித் தாக்கப்பட்டனர். பாழிக் கோட்டையிலுள்ள தங்கள் பிடியையேனும் காப்பாற்றிக் கொள்ள மோரியர் அரும்பாடுபட்டனர். ஆனால், சென்னி தமிழகத்தின் அன்றைய சென்னியாகிய துளுவ நாட்டிலேயே மோரியர் தடம் அழியும் வரை போரிட்டான். பாழிக் கோட்டை தரை மட்டமாக்கப்பட்டது.
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியின் பெரும்புகழ் டையன்சேந்தன் கொற்றனாரால் இனிது பாடப்பட்டுள்ளது. "எழுஉத்திணிதோள் சோழர்பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி குடிக் கடனாகலின் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்பவடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்றயானை.....
(அகம் 375)
தமிழகத்தைப் போரால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அசோகனுக்குத் தகர்ந்த பின்னரே, சமயப் போர்வையில் ஆட்சிப் புகழ் பரப்ப அவன் முனைந்திருக்க வேண்டும் என்னலாம். சங்க காலத்திலேயே தமிழகம் ஆரிய மயமாகத் தொடங்கியதற்கு அசோகனும் புத்த சமண சமயங்களின் இனிப்பான தலையீடு களுமே காரணம் ஆயின என்னலாம்.