பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

57

செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி கி.மு. மூன்றாம் நூற்றாண்டினன் என்றும், சிபி, முசுகுந்தன், காந்தன், தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் ஆகியோர் அவனுக்கு முற்பட்ட சோழர் என்றும் முனைவர் இராசமாணிக்கனார் கருதுகிறார். அவனுக்குப்பின் மனுநீதிச் சோழனும் முதற் கரிகாலனும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டினர் என்றும், பெரும்புகழ்வாய்ந்த இரண்டாம் கரிகாலன் கி.மு. முதல் நூற்றாண்டினன் என்றும் அவர் வகுத்துள்ளார். தமிழரசர் வரிசை முறையும் காலவரையறையும் முற்றிலும் நிறைவுற ஒழுங்குபடும்வரை இவ்வரிசை முறையையே நாம் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளலாகும்.

முதல் இலங்கை வெற்றி: மனுச்சோழன்

மனுநீதிச் சோழனே இலங்கையை ஆண்ட தமிழ்ச் சோழ அரசன் ஏலாரன் என்று முனைவர் இராசாமாணிக்கனார் முடிவு செய்கின்றனர். ஆவின் கன்றுக்குப் பதிலாக மைந்தனைத் தேர்க் காலிலிட்டரைத்த கதை இரு அரசர்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது என்பதே இதன் காரணம். முதற்கரிகாலனைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டினனாக அவர் கொள்வதற்கும் இதுவே வழிவகுத்தது என்னலாம். திருவள்ளுவர் கதை மரபில் அவரின் மாணவராகவும் புரவலராகவும் கூறப்படும் கடல் வணிகன் ஏலேல சிங்கனே - ஏலாரா என்று கருதுபவரும் உண்டு. 'நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழி லாண்ட உரவோன் மருக!’

(புறம் 66)

என்று வெண்ணிக் குயத்தியார் சோழன் கரிகாலனைப் பாடும் பாட்டில் கரிகாலன் முன்னோனாகக் குறிப்பது இந்த ‘மனுச் சோழனையே' என்று கருத இடமுண்டு. ஏனெனில் இவ்வடிகள் அம்முன்னோன் கடலில் கப்பலில் சென்று போராற்றியதையும், அச்சமயம் காற்றையே ஆட்கொண்டதையும் குறிப்பிடுகின்றன.

மயத்தில் வில், புலி, கயல் பொறிப்பு

தமிழ் மூவேந்தரும் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டு இமயத்தில் வில், கயல், ‘புலிக் கொடிகள் பொறித்தனர் என்று சங்க நூல்கள் பலகாலும் பகர்கின்றன. இவை வெறும்