58
அப்பாத்துரையம் - 16
புனைந்துரைகளென்று பல புலவரும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும் கொள்கின்றனர். வரலாற்று வான விளிம்பில் உள்ள தெற்கு வடக்குத் தொடர்புகளையும் தமிழிலக்கியத்தில் தமிழர் கடற் போர், தொலைவடவர் பற்றியும் ஆரியருடன் போர் செய்து பெற்ற வெற்றிகள் பற்றியும் வரும் மிகப்பலவான குறிப்புகள் புனைந்துரைகளாகக் கொள்ளுதற்கு இடந்தராதவை. இவற்றுள் பல புறத்துறையில் அரசரைப் புகழும் பாட்டுகள் மட்டுமல்ல; அகத்துறையில் காதலி கூற்றிலும், காதலன் கூற்றிலும், பாங்கி கூற்றிலும், பாங்கன் கூற்றிலும் உவமை நயம், அடைமொழி நயம் பாடப் பெரும் புலவர் இடைப்பெய்து கூறும் குறிப்புகள் எத்தனையோ உண்டு. நாடறிந்தனவாக மட்டுமன்றி வீடறிந்தனவாகக் கூறப்படும் இவ்வெற்றிகள் இன்று தமிழர் கனவுகாணாத ஓர் உயர் தேசிய வாழ்வையும், அதனூடாகப் பல வரலாற்று நிகழ்ச்சிகளையும் காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை.
தென்திசை, வட திசைப் போட்டி பெரும்பாலும் கங்கைப் பேரரசுகளும் தமிழகப் பேரரசுகளும் இவற்றுடனே ஆந்திர கலிங்கப் பேரரசுகளும் மட்டுமே ஈடுபட்ட ஒன்றாகும். இதில் தொடக்கக் காலத்தில் ஆந்திரப் பேரரசும் அதன்பின் ஆந்திர கங்கைப் பேரரசுகளும் ஆரிய அரசுகள் என்று கூறப்பட்டிருத்தல் கூடும். இங்கே ஆரியம் என்ற சொல் இன அடிப்படையான உணர்ச்சி காட்டும் சொல் அன்று; நாட்டடிப்படையாகவும் திசையடிப்படையாகவும் வழங்கிய சொல்லேயாகும். புத்தர் காலங்களில், கங்கை நாட்டினரே தம்மை மிகப் பெருமையுடன் ஆரியர் என்று கூறிக்கொண்டனர். ஆனால், இக்காலம் ஆரிய இன அடிப்படை ஒரு தேசிய அடிப்படையில் வளர்ந்த காலம் ஆகும்.
தமிழக நாகரிகமே கங்கை நாட்டில் இப்புதிய ஆரிய தேசியத்தை உருவாக்கக் காரணமாய் இருந்தது. ஆந்திரர் கலிங்க நாடு முழுவதும் வென்று இமயம் வரை பரவிய காலத்தில், இந்தத் தேசிய ஆரியர் புகழ் உச்ச நிலையடைந்தது. ஆந்திரர் வங்கத்தை வென்றதுடன் அமையாது பர்மாவின் பெரும் பகுதியையும் கைக் கொண்டபின் ஆந்திர -மகதப் பேரரசு ‘முக்கலிங்கம்' என்று அழைக்கப்பட்டது.முக்கலிங்கம் என்பது