பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

61

படுகிறான். அவனும் இமயம் முதல் குமரிவரை ஆண்டதாகப் பத்துப்பாட்டுக் கூறுகிறது.

"ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் தென்னங் குமரியோடாயிடை மன்மிக் கூறுநர் மறம்பதக் கடந்தே!”

99

இது நேரடியாட்சியாகவோ, எல்லா அரசராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேலுரிமையாகவோ, அல்லது மாநிலமெங்கும் ஆற்றிய வெற்றி உலாவாகவோ நிகழ்ந்திருக்கலாம். ஆனால், நெடுஞ்சேரலாதன் காலத்தை வரையறுக்கும் வரையிலும், இது பற்றி மேலும் சான்றுகள் அறியப்படும் வரையிலும் இதைத் திட்டப்படுத்திக் கூற முடியாது. இச்செயல் சோழரும், பாண்டியரும் புலி, கயல் பொறிப்பதற்கு முற்பட்டது என்பதில் மட்டும் ஐயமில்லை.

சோழருள் இமயத்தில் புலிக்கொடி தமிழ்ச் சின்னம் பொறித்தவன் கரி காலனே என்றும், பாண்டியருள் மீனக்கொடி பொறித்தவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே என்றும் கருத இட முண்டு.

முதல் வல்லத்துப் போர்

சோழருள் ஓரரசன் ஆரியரைத் தஞ்சையையடுத்த வல்லம் என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் முறியடித்ததாகப் பாவைக் கொட்டிலார் என்னும் புலவர் தெரிவிக்கிறார்.

“மாரியம் பின் மழைத்தோல் சோழர் வென்வேல்

வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை

ஆரியர் படையின் உடைக என்

நேரிறை முன்கை வீங்கிய வளையே!”

(அகம் 336)

காதலி காதலனிடம் உள்ள கோபத்தைச் சுழலும் வளையல் மீது செலுத்தி,வல்லத்துப்போரில் உடைந்த ஆரியர் படைபோல் என் வளை உடையட்டும் என்கிறாள்!