பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

தடுமாறுகிறது

65

என்பதே உண்மையாகும், தமிழினம் வரலாற்றுணர்வு அற்றது என்பதை விட, அவ்வரலாற்றுணர்வு அயலின, அயல்மொழி ஆதிக்கங்களால் அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டு வருகிறது என்று கூறுவதே பொருத்தமானது.

பிரிட்டிஷ் ஆட்சி பொதுவாக, தமிழகம் நீங்கிய கீழ்திசைக்கு முற்றிலும் அயலாட்சியாய் நிலவிற்று என்று கூற முடியாது. உண்மையில் சிந்து கங்கைவெளி போன்ற மாநிலங்களுக்கு வரலாற்று வெளிச்சம் அளித்தது அவ்வாட்சியே. அவ்வாட்சி யிலேயே அம்மாநிலம் புத்தரையும், அசோகனையும், கனிஷ் கனையும் கண்டது. அதற்குமுன் அது வரலாறு என்ற பெயரால் அறிந்ததெல்லாம் பஞ்சதந்திரக் கதைகளும், விக்கிரமாதித்தன் வேதாள பதுமைக் கதைகளும், புராணப் பஞ்சாங்கங்களுமே. அத்துடன் அயலாட்சி என்று கூறப்படும் அவ்வாட்சியிலேயே மாநிலத்தின் பழம் பெருமைக்குரிய சிந்துவெளி, நாலந்தா பாடலிபுர நகரம், கபிலவஸ்து, வடமதுரை ஆகிய இடங்கள் பழமையாராய்ச்சி ஒளிகண்டன. தவிர, அம்மரபுக்குரிய சமஸ் கிருதமொழி, இலக்கியம் ஆகியவை சார்ந்த ஆராய்ச்சிகளிலும் வெள்ளையர் தத்தம் தாய் மொழிகளில் காட்டிய ஆர்வத்தினும் மேம்பட்ட ஆர்வம் காட்டி, அவற்றைப் பேணி வளர்த்தனர்.

இவற்றுக்கு நேர்மாறாக, அதே ஆட்சியாளரும், ஓரளவு அவர்களுக்குப் பின் வந்த மாநில ஆட்சியினரும்கூடத் தமிழ், தமிழகம், தமிழின மொழிகள் ஆகியவற்றின் வரலாற்றிலும், ஆராய்ச்சியிலும், பாராமுக முடையவர்களாகவே இருந்து வந்துள்ளனர். தமிழகத்தில் பண்டைப் பெருமைக்குரிய கொற்கை, பழமதுரை, வஞ்சிமூதூர், மண் மூடிய உறந்தை, கடலால் ஓரளவு அழிவுற்ற புகார், பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், புதுவை, மல்லை, காஞ்சி ஆகிய இடங்களின் அகழ்வாராய்ச்சி தமிழக வரலாற்றுக்கும், மாநில வரலாற்றுக்கும்கூடப் பெரும்பயன் அளித்திருக்கும். ஆனால், அறிஞர் துப்ரேய்ல் போன்ற தனி வெள்ளையர் ஒருவர் இருவர் முயற்சியன்றி, ஆராய்ச்சித்துறையோ, ஆட்சியாளரோ அவற்றைக் கருத்தால் கூடத் தீண்டவில்லை.

தமிழகம், மாநிலத்தின் ஒரு நேரிய உறுப்பாகக்கூடக் கருதப்படவில்லை. மாநிலத்தின் ஒருபுற உறுப்பாக, அதன்