தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
67
புலவர்கள் தம் காலத் தமிழக வரலாற்றுச் செய்திகளை மட்டுமன்றித் தொலைவிலுள்ள கங்கை நாட்டுச் செய்திகளையும் நமக்குப் பதிவு செய்து சென்றுள்ளனர். இவை வெள்ளையர் வரும்வரை எவரும் அறியாத செய்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழரிடையே வரலாற்றுணர்வும், நில இயல், அறிவியல் உணர்வுகளும், பண்படாப் பிற இனத் தலையீடுகளாலும் ஆதிக்கங்களாலுமே படிப்படியாக நலிந்துவந்தன என்னல் வேண்டும். ஏனெனில் சோழப் பேரரசர், காலங்கடந்து கூட இவை புராண மரபுகளின் குளறுபடிகளுடன் கலவாது இயங்குவது காணலாம். எடுத்துக்காட்டாக, சங்க காலத்துக்கும் வேள்விக்குடிச் செப் பேடுகளின் காலத்துக்கும் இடையே ஐந்நூறு ஆண்டு இடையீடும் பெருத்த அரசியல் குழப்பமும் மாறுபாடுகளும் ஏற்பட்டிருந்தன. ஆயினும் சங்க காலத்திலேயே முற்பட்டவனான பல்சாலை முதுகுடுமிப் பாண்டியன் அளித்த நன்கொடையை அரசியல் மரபும், அரசியல் அரங்க மரபும் அறிந்து பிற்பட்ட பாண்டியன் உறுதி செய்ய முடிந்தது. இதுபோலவே தேவார காலத்துக்கும், பெரிய புராண காலத்துக்கும் ஐந்நூறு ஆண்டு இடையீடும் பெருத்த அரசியல் மாறுபாடுகளும் இடையே இருந்தன; ஆயினும் பெரியபுராணம் பாடிய புலவர் சேக்கிழாரால், முற்பட்ட கால அரசியல் பின்னணி நிலைகள் சரிவர உணர்ந்து தீட்டப்பட்டுள்ளன. அதே காலத்திலிருந்த சயங்கொண்டாரும் ஒட்டக் கூத்தரும் பெருஞ் சோழருக்கு ஆயிரமாண்டு முற்பட்ட சோழர்கள் வரலாற்றை அவர்களைப்பற்றிய சின்னஞ் சிறு செய்திகளையும் வரலாற்று மரபு வழியே அறிந்து உரைத்துள்ளார்.
தமிழக வரலாற்றுணர்வுக்குப் பிற்காலப் பாண்டியர் கல் வெட்டொன்று வியக்கத்தக்க நற்சான்று அளிக்கிறது. 12- ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்ட அப்பாண்டியன் சோழர் அரண்மனையையும் தலைநகர் முழுவதையும் அழித்துவிட்டான். ஆனால், பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகாலன் முன் அதனை அரங்கேற்றுவதற்காகக் கட்டப்பட்ட பதினாறு கால் மண்டபத்தை மட்டும் அழியாது காத்தானாம்! தில் வரலாற்று மரபின் ஆற்றலையும்