பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

69

சான்றுரைகள் அத்தனையையும் படிப்படியாக வளர்ந்த கற்பனை எனக் கருதுகின்றனர்.

ஆனால், மொழி எல்லை, தேச தேச எல்லைகடந்து பலவிடத்தும் பல காலத்தும், பலராலும், கரிகாலன் பெயர் போற்றுப்படுவதை வரலாற்றாசிரியர் முடிவு விளக்கவில்லை. தவிர கரிகாலன் பற்றிய பழந்தமிழ் இலக்கிய உரைகளே ஒன்றுக் கொன்று முற்றிலும் பொருந்தவில்லை.

முனைவர் இராசமாணிக்கனார் சங்க காலத்திலே கி.மு. 2-ஆம் நூற்றாண்டின் முடிவில் ஒரு கரிகாலனும், அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு கரிகாலனும் இருந்ததாகக் கொள்கிறார். இரு கரிகாலர்களையும் பற்றிய சங்க இலக்கியச் சான்றுகளையும் பிரித்துக் காட்டுவதுடன், 'வெண்ணி' அல்லது வண்ணில் என்ற இடத்தில் நிகழ்ந்த போர் பற்றிய குறிப்புகளையும் இருவேறு கரிகாலர்களால் ஆற்றபட்ட மூவேறு போர்கள் என்றும் விளக்கியுள்ளார்.

இவ்விளக்கத்தின் பின்னும் சங்க இலக்கியக் குறிப்புகள் தான் தெளிவடைகின்றன. சங்க காலத்திலேயே இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் தரும் வடநாட்டுப் படையெடுப்பும், கலிங்கத்துப் பரணி, மூவருலாக்கள் குறிப்பிடும் இமயம் அல்லது மேருவைச் செண்டாலடித்துப் புலி பொறித்தல், காவிரிக்குக் கரைகட்டல் ஆகியவையும் இரண்டாம் கரிகாலனுக்குரியனவென்று காள்ளக் கூடுமானாலும், சங்க இலக்கியம் அது பற்றிக் கூறாதது வியப்பைத் தராமலில்லை. வரலாற்றாசிரியர் பலர் இது காரணமாக இவற்றைப் பிற்காலப் போலிப் புனைந்துரை என முடிவு செய்ய எண்ணுகின்றனர். ஆனால், இவை வை சங்க காலத்திறுதியிலோ அல்லது புராண வரலாற்று மரபுகளின் வான விளிம்பிலோ உள்ள மற்றொரு கரிகாலன் செயலாகவும் இருத்தல் கூடும். ஏனெனில் பிற்காலச் சோழரின் அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுப் பட்டயங்கள், லெய்டன் பட்டயங்கள் ஆகியன பெருநற்கிள்ளி என்ற சோழனுக்கும், கோச்செங்கணான் என்ற சோழனுக்கும் இடைப்பட்டவனாக ஒரு கரிகாலனைக் குறிக்கின்றன.