70
அப்பாத்துரையம் - 16
வடதிசைப் படையெடுப்பு முதலிய செய்திகள் முற்றிலும் புனைந்துரை யென்று கூறத்தக்க தன்று என்பதை 8-ஆம் நூற்றாண்டுக்குரிய மாலேபாட்டுப்பட்டயங்கள் முதற் கொண்ட தெலுங்கு சிங்கள வரலாற்றேடான
ஆதாரங்களும்,
மகாவம்சோவும் காட்டுகின்றன. ஆந்திர நாட்டிலும் மைசூர் நாட்டிலும் ஆண்ட சோழ மரபினர் தம்மைக் கரிகாலன் மரபினர் என்று பெருமையுடன் கூறிக் கொள்வதை நோக்க, கரிகாலன் அப்பகுதியை வென்று ஆண்ட காலத்தில் அவன் ஆட்சியாளராக அமர்த்திய சோழர் குடி இளவல்களாகவே அவர்கள் இருத்தல் கூடும் என்று கருத வேண்டியிருக்கிறது. மிகப் பிற்பட்ட காலங்கள் வரையுள்ள பல மரபினர் - ஹைதராபாதில் உள்ள வாரங்கல் ஆண்ட காகதீய மரபினர், விஜயநகர ஆட்சிக் காலத்தில் கார்வெட் நகர் ஆண்ட சாளுவ மரபினர், ஒரிசா அல்லது கலிங்கம் ஆண்டகங்க சோடர் ஆகியவர்களது பெரும் பரப்பு கரிகாலனின் பரந்த வெற்றிகளுக்குச் சான்று தருவன வாகும்.
தெலுங்குக் கல்வெட்டுகளில் பலவற்றில் ஒரு சமஸ்கிருதப் பாட்டின் அடிகள் ஓயாது பல்லவியாகக் காதில் மணியோசை போல ஒலிக்கின்றன. மூன்று கண்ணுடைய ஏதோ ஒரு அரசன் கரிகாலனுக்குப் பணியாதிருந்ததையும், கரிகாலன் அவன் மூன்றாம் கண்ணைக் குடைந்தெடுத்துவிட்டதையும் காவிரிக்குக் கரைகட்டிய செய்தியையும் அது புனைந்து புகழ்கின்றது. அப்பாடல்,
சரண சரோருஹ விஹத விலோசன
த்ரிலோசன
ப்ரமுகாகில ப்ருதி வீசுவர
காரில்
காவேரி தீர கரிகாலகுல-
என்பது, இதையே குலோத்துங்கன் பிள்ளைத் தமிழும்