பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

முகுல நதிக்கரசன்

71

முடிகொடு வகுத்தகரை

முகில்தொட அமைத்தது

அறிவோம்!

இருபுறமும் ஒக்க நினது

ஒருபுலி பொறிக்க வட

இம கிரி திரித்தது

அறிவோம்.

இகல் முகரி முக்கணிலும்

ஒருகண் கிழியக் கிழியில்

எழுது கண் அழித்தது

அறிவோம்!

என்று இன்னும் சமத்காரம் படப் புனைந்துரைக்கின்றது.

தமிழில் பெரியபுராணம் (12-ஆம் நூற்றாண்டு), சோழவம்ச சரித்திரம் என்ற பிருகதீஸ்வரர் மகாத்மியம் (16-ஆம் நூற்றாண்டு), சோழ மண்டல சதகம். செவ்வந்திப் புராணம் (17-ஆம் நூற்றாண்டு) ஆகியவையும், தெலுங்கில் பண்டிதாராத்யசரிதம் (13-ஆம் நூற்றாண்டு), கன்னடத்தில் நவசோள சரித்திரம் (14-ஆம் நூற்றாண்டு) ஆகியவையும் யாவும் தத்தம் காலங்களுக்கேற்பக் கரிகாலனைப் பற்றிய பல மாறுபட்ட கதைப் பதிப்புகள் தருகின்றன.

வெண்ணில் போர் I அல்லது வெண்ணி வாயிற் போர்

வெண்ணி அல்லது வெண்ணில் என்பது தஞ்சாவூரை அடுத்த ஓர் ஊர். இது தேவாரப்பதிகம் பெற்ற காலத்தில் நாயன்மாரால் பாடப்பட்டுள்ளது. இப்போது அது கோயிலுண்ணி (கோயில் வெண்ணி) என்ற பெயருடன் நிலவுகிறது.

முதல் வெண்ணிப் போரில் முதற் கரிகாலன் பதினொரு வேளிர்கள் அல்லது சிற்றரசர்களையும் சில அரசர்களையும் ஒருங்கே முறியடித்தான் என்று அறிகிறோம். அரசர்கள் யார் யார் என்பது கூறப்படவில்லை யானாலும், பன்மையிலேயே குறிக்கப்படுவதால் சேர பாண்டியர் இருவருமே கரிகாலனை எதிர்த்தனர் என்று கருதலாம். முதற் கரிகாலன் பேரரசனல்லா விட்டாலும் அந்நிலைக்கு உயர்ந்து வருவதையே இது குறிக்கிறது.