பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் - 16

பாடல் ஒன்று குறிக்கிறது. சேரமன்னன் பெருஞ்சேரலாதன் கரிகாலனுடன் நேருக்கு நேர் நின்று இறுதிவரை போரிட்டான். அவன் மார்பில் பாய்ந்த வேல் முகுதுவரையில் துளைத்ததால், மார்பில் மட்டுமன்றி முதுகிலும் புண்பட்டுவிட்டது; 'முதுகிற் புண்' என்பது பொதுவாகக் கோழைமையின் சின்னம். இங்கே சேரன்புண் இத்தகையதல்ல வாயினும் அவன், இச்சொல்லுக்கு இடமேற்பட்டது கண்டு, போரை நிறுத்தி வடக்கிருந்து மானத்துடன் உயிர்விடத் துணிந்தான்.

இச்செய்திகளைக் களைக் கழாத்தலையார் என்ற புலவர் உருக்கமாகப் பாடுகிறார். சேரநாட்டு நிலையும் மன்னன் விழுமிய நிலையும் நம் மனக்கண் முன்னே புலவரால் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றன.

“மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப,

இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப,

சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,

உழவர் ஓதை மறப்ப, விழவும்

அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,

புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்

வாள் வடக்கிருந்தனன்.

(புறம் 65)

"முரசு முழங்கவில்லை; யாழ் இசையை மறந்தது; அகன்ற பால் வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன; சுறுசுறுப்பான தேனீக்கள் திரட்டிய தேனை இப்போது தீண்டுவாரில்லை; உழவர் கழனிகளில் உழுதலைத் தவிர்த்தனர்; ஊர்ப்புற வெளிகள் விழாவயரும் கூட்டங்கள் இன்றி வெறிச்சென்றிருக்கின்றன” என்று அவர் சேரநாட்டு நிலையைச் சித்தரிக்கிறார். 'ஞாயிறும் திங்களும் எதிரெதிர் நின்று போரிட்டுத் திங்கள் சாய்வதுபோல் சாய்ந்தான் சேரன்' என்று அம்மன்னர் மாண்பையும் புலவர் பெருமித இரக்கத்துடன் குறிக்கிறார்.

களத்தில் வெற்றியடைந்த கரிகாலனைப் பாடிய புலவர் ஒரு பெண் பாவலர். வெண்ணிக்களத்துக்குரிய வெண்ணி ஊரிலேயே பிறந்தவர். குயவர் தொழில் மரபினர். அவர் வெற்றி வீர