பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

75

அரசனைப் பாடினாலும், அப் பாட்டில்கூடச் சேரன் பெருமித முடியே முனைப்பாக, ஆனால், கரிகாலனின் பெருமை தோன்றப் பாடப்பட்டுள்ளது.

கடற்போர் பல செய்த சோழ மரபில் வந்தவனே என்று அப்பெண்பாற் புலவர் அரசனை விளித்துப் பாடுகிறார்.

"நனி இரு முந்நீர் நாவாய் ஒட்டி

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக! களி இயல் யானைக் கரிகால் வளவ! சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே, கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலக மெய்திப்

புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே!”

-

(புறம் 66)

“கரிகாலன் வெற்றியால் புகழ் பெற்றானாம்! சேரலாதன் வடக்கிருந்து புகழ் பெற்றானாம்! ஒருவனது - வீரத்தின் புகழ்! அடுத்தவனது வீரத்தின் மானத்தின் புகழ்! எது நல்லது - பின்னது அல்லவா?' என்று கேட்கும் புலவரின் கேள்வி நயம், வெண்ணிப் போரின் வீரர் வீர நயங்களைவிடச் சிறந்தாகவே காணப்படுகிறது.

சேரன் வீரம், மானம் நாடி மாளத்துணிந்த பெருமிதநிலை ஆகிய செய்திகள் ஒரு கணத்தில் தமிழகமெங்கும் பரவின. அப் பெருஞ்சேரனைக் காணும் ஆர்வம் தமிழக மெங்கணும் எழுந்தது சான்றோர்கள் பலர் தீர்த்தயாத்திரைக்குப் புறப்படும் இக்காலப் பத்தர்கள்போலப் போர்களத்துக்கு விரைந்தனர். மன்னனுடன் வடக்கிருந்து மாளும் மாள்வே புகழ்மாள்வு என்று அவர்கள் துணிந்தனர்.

66

“கரிகால் வளவ னொடு வெண்ணிப் பறந்தலைப்

பொருது புண் நாணிய சேரலாதன்

அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்

அரும் பெறலுலகத் தவனோடு செலீஇயர்