பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

||--

பெரும் பிறிதாகி யாங்கு!”

அப்பாத்துரையம் - 16

(அகம் 55)

என்று இப்புகழார்வத்தை மாமூலனார் தீட்டிக்காட்டியுள்ளார்.

வாகைப் பறந்தலை

முதலாவது கரிகாலன் ஆற்றிய மற்றொரு பெரும் போர் வாகைப் பறந்தலைப் போராகும்.

விரிஉளைப்பொலிந்த பரியுடை நன்மான்

வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் சூடாவாகைப் பறந்தலை ஆடுபெற

ஒன்பது குடையும் நண்பக லொழிந்த

பீடில் மன்னர் போல

ஓடுவை மன்னால்!

(அகம் 125)

என்ற பாடலில் பரணர் இப்போரை விரித்துரைத்துள்ளார். 'வாகை' ஒரு இடத்தின் பெயர் என்பதைக் கவிஞர் - தமிழ்ப் புலவர் மரபுப்படியே 'சூடாவாகை' என்று அடைகொடுத்துத் தெரிவிக்கின்றார். கவிஞர் அப்படிக் கூறவில்லையானால் வாகை ஒரு போர்க்களம் என்பதை உணராமல் 'வெற்றிக்குரிய பூ வாகக் கொண்டு நாம் மயங்க இடமேற்பட்டிருக்கக் கூடும்.

கரிகாலன் அப்போரில் ஒன்பது மன்னர்களை எதிர்த்துச் சமரிட்டான். அவர்கள் கரி, பரி, தேர், காலாட்படைகளை மிகுதியாகவே உடையவராய் இருந்தனர். ஆனால், அவர்களால் கரிகாலன் முன் நிற்க முடியவில்லை. கரிகாலன் அரும்பெரு வெற்றி பெற்றான். ஒன்பது மன்னரும் தம் கொற்றக் குடைகளையும் புகழ்க் கொடிகளையும் களத்திலே எறிந்துவிட்டு ஓடினர்.

இப்போரைச் சில வரலாற்றாசிரியர்கள் இரண்டாம் கரிகாலனின் வடதிசைப் படையெடுப்பின் ஒரு பகுதியாகவும், அவன் திரும்பும் சமயம் நடைபெற்றதாகவும் குறிக்கின்றனர். ஆனால், முதற் கரிகாலனின் இப்போர்களைப் பாடிய பரணரும், மாமூலனாரும் மிக முற்பட்ட காலத்தவர்கள். ஆகவே இது